ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

916 காளைகள், 936 மாடுபிடிவீரர்கள்... அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி

தமிழர்களின் வீரவிளையாட்டுகளின் ஒன்றான ஜல்லிகட்டுபோட்டி தை மாதம் முதல் தமிழகத்தில் களைகட்டும். உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் மாணவர்களின் அறவழிபோராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசரசட்டம் கொண்டு வந்ததால் மீண்டும் ஜல்லிகட்டுபோட்டி நடத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அரசு விதித்த நிபந்தனையின் படி நடத்தபட்டு வருகிறது.
காளைகளுக்கு இரண்டுகட்ட மருத்துவ பரிசோதனை செய்யபட்டு அனுமதிக்கபட்டுள்ளது. இதேபோல் இப்போட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன்கார்டு ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கபட்டார்கள். இந்த்போட்டியில் 916 காளைகள் பங்கேற்றன. 936 மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். போட்டியை வருவாய்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் போலீஸ் கமிசனர் மாநகராட்சி கமிசனர் ஆகியோர் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து முதன்முதலில் சீறிவந்தது கோயில்காளை. தொடர்ந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் அடக்கமுயன்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்கள் பிடியிலிருந்து தப்பித்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி நான்கு அடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். ஷாகுல்  nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக