வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

திண்டுக்கல் லியோனிக்கு 500 மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் .. பாமகவினர் அராஜகம்

Dindigul I.Leoni got life threaten from PMK cadersதிண்டுக்கல்: திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு பாமக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பழனியில் நேற்று நடிகரும், திமுக பிரமுகருமான, வாகை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார் லியோனி. ஆனால் மதியத்திற்குள், லியோனியின் செல்போனுக்கு பாமக தரப்பில் இருந்து 500க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தலைமைக்கு லியோனி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் டிஎஸ்பியிடம் லியோனி புகார் கொடுத்தார். இதுகுறித்து கூறிய லியோனி, "பாமகவின், காடுவெட்டி குரு பிறந்தநாள் வரப்போவதாகவும், அவரை நான் பட்டிமன்றங்களில் தவறாக பேசிவிட்டதாகவும் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள்.
உண்மையில் நான் பாமகவின் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குறித்து எதுவும் பட்டிமன்றங்களில் பேசவில்லை" என்றார். கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று மாலை திருவண்ணாமலை நகரத்தில், திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவை லியோனி விமர்சித்து பேசியதாக பாமக பல்வேறு செல்போன் எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம், திண்டுக்கல் ஐ.லியோனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக