ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஒரு எம்.எல்.ஏவுக்கு 4 குண்டர்கள் பாதுகாப்பு: பன்னீர்செல்வம் தகவல்!


கூவத்தூரில் அடைத்து வைத்துள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக சசிகலா ஆட்கள் ரவுடிகளை வைத்து சித்ரவதை செய்வதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ள எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதற்காக ஒரு எம்.எல்.ஏவுக்கு 4 குண்டர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

2.. : கூவாத்தூர் சொகுசு ரிசார்ட்டில் வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய சசிகலா, ” பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, நான் அம்மா சமாதிக்கு சென்று வணங்கி விட்டு திரும்ப முயன்றபோது, அந்த இடத்தை விட்டு என்னால் வெளியேற முடியவில்லை. ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து விடாமல் இழுத்தது.” இவ்வாறு பேசினார்.


3   : கூவாத்தூரில் வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசிய, சசிகலா, ஜெயலலிதா உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்றார். ஆனால் இதற்கு இங்கிருந்து சென்றவர்களே எதிராக மாறியுள்ளனர் எனத் தெரிவித்தார். இந்த கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வராவிட்டால் ஜெயலலிதா உருவப்படத்தை யார் திறப்பார்கள் என திமுகவில் பேசிக் கொள்வதாக திமுகவில் இருந்தே ஒருவர் தனக்கு தெரிவித்ததாகவும் சசிகலா கூறினார்.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக