வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

2G .. நீதிமன்றத்தில் ஆ.ராசா பதிலடி .. சி பி ஐ வழக்கறிஞர் திணறல்!


ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல  ;
இதை கேட்டதும் கடும் கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது: ; தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடு தல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குனர், துணை இயக்குனர் என அனைவருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர்; அதைதான், ராஜா ஏற்றுள்ளார். அப்படியானால், இந்த கோர்ட், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்த பின், கோர்ட்டிற்கு வந்து, 'நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்' என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?   அரசு செயலர், அமைச்சரவை செயலருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்குஅடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்க லாமே; அதை, யாரும் தடுக்க போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த கோர்ட்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீதிபதியின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:
இந்த வழக்கில் கோப்பு பதிவு களையும், வாய்மொழி சாட்சியங்களையும், உங்கள் முன் வைத்துள்ளேன். முடிவு எடுக்க வேண்டியது கோர்ட்டு தான். முடிவைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சட்டென எழுந்த ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல,'' என பதிலடி தரவே, மீண்டும் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
- நமது டில்லி நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக