செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

குடியரசு தலைவரை ஸ்டாலின் சந்திக்கிறார் 23 தேதி டெல்லியில் பிரணாப் முகர்ஜியை ..

எடப்பாடி பழனிச்சாமி தலைமயிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு கோரும் தீர்மானத்தின்போது சட்டசபையில் ஏற்பட்ட அமளி தொடர்பாக அன்றைய தினமே தமிழக கவர்னரை சந்தித்த மு.க. ஸ்டாலின் புகார் அளித்தார். கவர்னருடனான சந்திப்புக்கு பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர். சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், சட்டசபையில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டதை கண்டித்து, வரும் 22-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.க. அறிவித்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற போராட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கிடையே, தமிழக சட்டசபையில் நடைபெற்ற அமளி மற்றும் ஜனநாயக படுகொலை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடவும் தி.மு.க. தீர்மானித்தது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் செய்திருந்தனர். இந்நிலையில், வரும் 23-ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. முக்கிய தலைவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக