செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

124 அதிமுக ஒன்றியச் செயலாளர்களை நீக்க ஆலோசனை!

மின்னம்பலம்.காம் :“ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், கே.பிமுனுசாமி, பொன்னையன் என முகாம் மாறியவர்களை எல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் பொதுச் செயலாளரான சசிகலா. பன்னீர் அணிக்கு மாறிய எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் உறுப்பினர்களாக தொடர்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதியிலிருந்து அதாவது, ஜெயலலிதா சமாதியில் பன்னீர் மௌனவிரதம் இருந்து, மௌனம் கலைத்தது தொடங்கி ஏராளமான அதிமுக நிர்வாகிகள் அவரைச் சந்தித்தனர், ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பங்கள் காரணமாக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது, எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வந்து பழனிச்சாமி முதல்வராகிவிட்டார். பழனிச்சாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், கட்சியின் துணை பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அவருக்கு அருகிலேயே இருக்கிறார்.
போயஸ் கார்டனில், தினகரனுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘பன்னீர் பக்கம் முக்கியமானவர்கள் நாலு பேரை மட்டும் நாம கட்சியை விட்டு நீக்கியிருக்கோம். ஆனால் தமிழ்நாடு முழுக்க பல ஒன்றியச் செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள் என பன்னீர் வீட்டுக்குப்போனவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒன்றியச் செயலாளர் 385 பேருல 124 பேர் பன்னீரை நேர்ல போய் பார்த்திருக்காங்க. அவர்களை நாம் இன்னும் நம்மோடு வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படி வைத்திருந்தால், அது இவ்வளவு நாள் நம்மோடு இருப்பவர்களை அவமானப்படுத்துவதுபோல ஆகிவிடும். அதனால் உடனடியாக அப்படிப் போனவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கணும்’ என்று பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். ‘நீங்க சொல்றதும் சரிதான். நான் சின்னம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன். அதுக்குமுன்பு அப்படி யாரெல்லாம் போனாங்க... எவ்வளவு பேரு இருகாங்க... என்ற லிஸ்ட் ரெடி பண்ணுங்க...’ என்றும் சொன்னாராம். உடனடியாக மாவட்டச் செயலாளர்களிடம் பேசியிருக்கிறார் பழனிச்சாமி. ‘பன்னீரை நேரடியாக போய்ப் பார்த்தவங்க யாரு... அவருக்கு ஊரில் இருந்தபடியே ஆதரவு தெரிவிச்சவங்க யாரு...பன்னீருக்கு ஆதரவா போஸ்டர் அடிச்சது யாருன்னு எல்லா லிஸ்ட்டும் உடனடியாக ரெடி பண்ணுங்க. அப்படிப் போனவங்க பொறுப்பில் இருந்தாலும் சரி... உறுப்பினராக இருந்தாலும் சரி... ஒரு கருப்பு ஆடுகூட இனி உள்ளே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்துலயும் நம்ம கட்சி ஃபேஸ்புக் பக்கத்துல நிறையப்பேரு பன்னீருக்கு ஆதரவு தெரிவிச்சு போட்டோ போட்டதையும்கூட என்கிட்ட காட்டினாங்க. அப்படி இருந்தாலும் விட வேண்டாம். எல்லோருடைய லிஸ்ட்டையும் உடனடியாக வேண்டும். அவங்க எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கப் போறோம். பொறுப்பில் இருப்பவர்களை நீக்கும்போது, அந்த இடத்துக்கு அவருக்கு அடுத்த இடத்தில் யார் இருக்காங்களோ அவங்களுக்கு பொறுப்பு கொடுத்துடலாம். அந்த லிஸ்ட்டையும் எனக்குக் கொடுங்க..’ என்று கேட்டிருக்கிறார்.

பழனிச்சாமிக்கு நெருக்கமான மாவட்டச் செயலாளர் ஒருவர், ‘அப்படிப் பார்த்தால் நிறையப் பேரை நீக்கவேண்டியிருக்குமே... என்ன செய்யலாம்?’ என்று கேட்டிருக்கிறார். ‘இருக்கட்டும். அதனால எந்தப் பிரச்னையும் இல்ல. துரோகிகளை உள்ளே வச்சுக்கிட்டு கட்சி நடத்த முடியாது. சின்னம்மாகிட்ட பேசுறதுக்கு தினகரன் தம்பி போறாரு. அவரு போய்ட்டு வந்ததும் அறிவிப்பு வெளியிடணும்’ என்று சொன்னாராம் பழனிச்சாமி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “பரப்பன அக்ரஹாரா சிறையில், ஞாயிறு இரண்டு நாட்களும் கைதிகளைச் சந்திக்க அனுமதி இல்லை. ஆனாலும் இளவரசியின் மகன் விவேக்கும், அவரது மனைவி கீர்த்தனாவும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பெங்களூருவில்தான் தங்கியிருக்கிறார்கள். விவேக் முன்பு பெங்களூருவில் பணிபுரிந்தவர் என்பதால், அங்கே அவருக்கு நட்பு வட்டம் அதிகம். பெங்களூரு ஜெய் நகர் பகுதியில் விவேக்கின் நெருக்கமான நண்பர் ஒருவரின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதாம். அங்கேதான் விவேக்கும், அவரது மனைவியும் தங்கியிருக்கிறார்கள். பெங்களூருவில் சரளமாக கன்னடம் பேசும் வழக்கறிஞர் ஒருவரை தனது உதவிக்காக விவேக் வைத்திருக்கிறார். அவர் தினமும் காலையும், மாலையும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலா, இளவரசியை சந்திக்க முடியுமா... உள்ளே இருப்பவர்களுக்கு எந்தவகையிலாவது உதவிகளைச் செய்யமுடியுமா என்றெல்லாம் விசாரித்து வருகிறாராம். இன்று காலையில் சிறை வளாகத்துக்கு விவேக்கும், கீர்த்தனாவும் போயிருக்கிறர்கள். இருவரும் நீண்டநேரம் காரில் காத்திருந்தார்களாம். அதன்பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. மீடியாவோ, அதிமுக-வினரோ தற்போது அந்தப் பகுதியில் இல்லை. அதனால், அங்கே சென்று வருவதில் சசிகலா உறவினர்களுக்கு சிக்கல் எதுவும் இல்லையாம். மதியம் 12 மணி அளவில் விவேக், கீர்த்தனா இருவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது. விவேக்கை பார்த்ததும் இளவரசி அழ ஆரம்பித்துவிட்டாராம். விவேக்தான் அவரை சமாதானம் செய்திருக்கிறார். கட்சி தொடர்பாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சில விஷயங்களை விவேக்கிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டாராம் விவேக். விவேக்கிடம் பேசும்போது, சசிகலாவும் கலங்கிய கண்களுடன்தான் இருந்தாராம்.” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்த வாட்ஸ் அப்,

‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பன்னீரை ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு தீபா ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்களில் எல்லாம் பன்னீர் படம் இருந்தது. இப்போது தீபாவின் கணவர் திடீரென, ‘இனி, தீபா படம் போடும் போஸ்டர்கள் எதிலும் பன்னீர் படம் இருக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக