திங்கள், 23 ஜனவரி, 2017

மெரினாவின் அதிகாலை முகம் ! RSS-காரர்கள் கூட்டத்திற்குள் புகுந்து அடாவடி!


ஜல்லிக்கட்டுக்கு எதிரான அறவழிப் போராட்டம் இன்று எப்படி வன்முறையாய் மாறியது? என தெரிந்து கொள்ளப் போராடும் மாணவர்களிடம் விசாரித்தோம். நம்மோடு பேசிய முகில் வெண்மணி என்ற மாணவரது கருத்துக்களை கீழே கொடுத்துள்ளோம்.ஆதியின் வீடியோவை பார்த்ததும் மெரினாவை நோக்கி என் நண்பர்களுடன் நேற்றிரவு 7 மணிக்கு புறப்பட்டேன். காலை 8 மணி வரை அங்குதான் இருந்தேன். ஆதி, சேனாபதி பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டம் குறைவதை பார்க்க முடிந்தது. எனினும் பலர் அங்கு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஒரு 3 அல்லது 4 மணி வாக்கில் சில RSS-காரர்கள் தேசியக் கொடியை ஏந்தி வந்து இந்தியாவை எதிர்க்காதே மோடியை வசை பாடாதே என கோஷமிட்டனர்.
அங்கிருந்த மக்கள் அவர்களை வெளியேற்றிவிட்டனர். அதன்பிறகு போலீஸ் வருகை அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது இயக்குநர் ராம் அங்கு வந்து பேச முற்பட்ட போது அதை எந்த அதிகாரிகளும் கேட்கத் தயாராயில்லை. ஒரு ஐந்து மணி வாக்கில் அனைவரையும் கலைந்து செல்லும்படி போலீஸார் கூறினார்கள். கலைந்து செல்ல மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளினார்கள். இதன்பிறகு தான் கடல் அருகில் போராட்டம் ஆரம்பமானது. போலீஸ் தடியடி செய்ய ஆரம்பித்தார்கள், அருகிலிருந்த சேரி மீனவர்கள் எங்கள் போராடும் மக்களுக்கு ஆதரவாக குவியத்தொடங்கினர். போலீஸ் தடியடி நடத்தும்போது என் நண்பர்களுடன் இணைந்து தப்பிக்க முற்பட்ட போது என்னையும் தாக்கினார்கள். அதன்பிறகு நான் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். மீனவ நண்பர்கள் தான் மிகவும் உதவி செய்தார்கள்
என்று கூறினார்.  மின்னம்பம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக