திங்கள், 16 ஜனவரி, 2017

பீட்டா மீது வழக்கு:சமூக ஆர்வலர்! PETA kills almost all the animals they take in. 

மதுரை ஆனந்த் ராஜ். தென் தமிழகத்தின் மிக முக்கியமான சமூக ஆர்வலரான இவரது நீதிப் போராட்டத்தால் மருத்துவத் துறையில் பல மாற்றங்கள் நடந்தன. உடல் உறுப்பு தானத்தில் நடந்த முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்த இவரது போராட்டத்தின் பின்னர்தான், உடல் உறுப்புதானம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது. அப்படி போராடும் ஆனந்த் ராஜ், சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீது விரைவில் வழக்குத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தன் முகநூல் பக்கத்தில் அவர், ‘என்னுடைய அடுத்த பொதுநல வழக்கு பீட்டா, பிராணிகள் நலச் சங்கங்கள் மீது. உலக மருந்துக் கம்பெனி மாஃபியாக்களின் கைக்கூலியாக பீட்டா செயல்படுகிறது என பல ஆண்டுகளாக நான் பேசியும் எழுதியும் வருகிறேன்.
மதுரையின் அனைத்து அரசு மருத்துவமனைகளில் மட்டும் கடந்த 2015 ஓராண்டில் மட்டும் 80,342 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வந்துள்ளனர் (தனியாரை தவிர்த்து). பீட்டா, பிராணிகள் நலச் சங்கங்கள் வருகைக்குமுன்பு 30 ஆயிரம்கூட தாண்டியிருக்கவில்லை. நாய்களை கொல்லக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என்று போலி பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி மக்கள் நாய்க்கடியால் அவதிப்படுகின்றனர். நாய்கள் மக்களைக் கடிக்க வேண்டும், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் மருந்துகள் விற்பனையாக வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். கடந்த 5 ஆண்டுகளில் நாய்க்கடி மருந்துகள் (Immunoglobulin) கொள்முதல் செய்ய தமிழக அரசு செலவு செய்த தொகை ரூ.65 கோடி. தற்போது நம் வரிப் பணங்கள் மருந்துக் கம்பெனிகள் பாக்கெட்டில். அந்த ரூ.65 கோடி இருந்திருந்தால் இன்று 20 படுக்கை கொண்ட 60க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும்
ஏற்படுத்தியிருந்திருக்கலாம். அரசின் (மக்களின்) நிரந்தரச் சொத்தாக மாறியிருக்கும். நாய்க்கடி வலி வேதனை, மரணங்களை நம் குழந்தைகள், மக்கள் மீது சுமக்க வைத்துள்ளது பீட்டாவும், பிராணிகள் அமைப்பும். நாய்கள் கடித்து குதறி வலியால் துடித்தும், இறந்த மக்களுக்கு என்ன சொல்லப் போகிறது பீட்டா? காரில் வலம்வரும் பீட்டா உறுப்பினர்களுக்கு நாய்க்கடி பற்றி என்ன தெரியப் போகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் 40 சதவிகிதம் தெருவில் விளையாடும் குழந்தைகள், முறையான
சிகிச்சையில்லாமல் எத்தனை குழந்தைகள் ரேபிஸ் தாக்கி இறந்திருப்பார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ள ஆனந்த் குமார், விரைவில் பீட்டாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.  minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக