புதன், 4 ஜனவரி, 2017

திமுக பொதுக்குழு கூடுகிறது .. !

திமுக பொதுக்குழு இன்று காலை, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடுகிறது. அரங்கிலும், பால்கனியிலும் 2000 இருக்கைகள் வரையில்தான் உள்ளது, கட்சி நிர்வாகத்துக்காக, மாவட்டங்களையும், ஒன்றியங்களையும் பிரித்ததால் பொதுக்குழு உறுப்பினர்கள் இரண்டு மடங்காகிவிட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரம் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, அரங்கில் இடம் போதாததால் வெளியில் திரை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களிடம், தலைமை பல உத்தரவுகளையும் போட்டுள்ளது, அதாவது காலை 7.30 மணிக்குள் அறிவாலயம் வந்துவிடவேண்டும், அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 8.00 மணிக்கு காலை உணவு முடித்துவிட்டு, 9.00 மணிக்கு பொதுக்குழு துவங்கப்படுகிறது. மேடையில் யாரும் ஸ்டாலினுக்கு சால்வை போடக்கூடாது, அதேபோல் விளம்பர போஸ்டர்களில் ஸ்டாலின் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்று ஸ்டாலினே சொல்லியிருக்கிறாராம்.

பொதுக்குழுவில் பேராசிரியர் தீர்மானம் வாசித்ததும், பொதுக்குழுவை முடித்துவிடலாம் என்ற ஆலோசனையாம். இந்த தகவலை நேற்று மாலை 7.00-மணி டிஜிட்டல் திண்ணை பகுதியில் தெளிவாக வெளியிட்டிருந்தோம். அதாவது அதிமுக 60 நிமிடங்களில் பொதுக்குழுவை முடித்தது போல், திமுக,வும் அதிமுக பாணியில் 60 நிமிடங்களில் பொதுக்குழுவை முடிக்க போகிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
சசிகலா இதே நாளில் அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் சந்திக்கிறார். எப்படியோ இன்று சென்னை மாநகரம் வெளியூர் வாகனங்களால் ஸ்தம்பிக்கபோகிறது. போக்குவரத்து காவல்துறையினர் என்ன செய்யலாம், சென்னைக்குள் வரக்கூடிய வாகனங்களை எப்படி மாற்றிவிடலாம் என்ற ஆலோசனையில் இரவு முழுக்க இருந்தனர். . minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக