திங்கள், 30 ஜனவரி, 2017

தமிழிசையின் அப்பா குமரி அனந்தன் :காந்தியை இழிவு படுத்திய பாஜக

காந்தியை இழிவு படுத்திய பாஜக வை கண்டித்து இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரிஅனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, நீண்ட நெடுங்காலமாக செயல்பட்டு வரும் மத்திய அரசின் கதர், காதி கிராமத் தொழில் துறையின் சின்னத்தில், இதுவரை, மகாத்மா காந்தி படத்தை ராட்டை சுற்றுவது போல் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த படத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் படத்தை நாடு முழுவதும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நாட்டின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த தேசப்பிதா காந்தியடிகளின் படத்தை அகற்றியதை எதிர்த்து நாட்டுமக்கள் அனைவரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  என்ன  வசதி பாருங்க   .அப்பா காங்கிரஸ் மகள் பாஜகா

மேலும், தற்போது பாஜக ஆளும் அரியானா மாநில அமைச்சர் ரூபாய் நோட்டுகளில் உள்ள காந்தி படத்தை அகற்றுவோம் என்று கூறி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற வேளையில் இறங்கியுள்ளார். ஒரு நிறுவனம் காந்தி படத்தின் மீது கால்மிதியடிகள் இருப்பதைப் போன்ற படத்தை வெளியிட்டு விற்பனை செய்துள்ளது. இத்தகைய அவமதிப்பு நடவடிக்கைகள் குறித்து பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
உலக நாடுகளில் 120 நாடுகள் மகாத்மா காந்தியடிகள் படத்தை தபால்தலையாக வெளியிட்டு பெருமைப்படுத்தி இருகின்றன. 80 நாடுகள் காந்தியடிகளின் சிலையை நிறுவியுள்ளன. உலகமே போற்றும் மகாத்மா காந்தியடிகளை மத்திய பாஜக அரசு மதிக்காமல் செயல்படுவதை கண்டித்து இன்று 30-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் எனது தலைமையில் உண்ணாநோன்பு அறப்போரட்டம் நடத்த உள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை செயலாளர் எஸ்.வி.ரமணி மற்றும் மாநில நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். காந்தியடிகளை இழிவுப்படுத்திய பாஜக-வை கண்டித்து நடைபெறும் இந்த அறப்போரட்டத்தை மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைகிறார் என்று தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக