திங்கள், 30 ஜனவரி, 2017

திருச்சி : மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விரட்ட உறுதி

Trichy மொழிப்போர் தியாகிகள் 2017 (1)மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை உயர்த்தி பிடிப்போம்! BJP-RSS இந்துத்துவ கும்பலை அடித்து விரட்ட சபதம் ஏற்போம்!! மிழகத்தில் 1960-களில் பார்ப்பனக் கும்பலின் இந்தி திணிப்புக்கு எதிராக தன் இன்னுயிரை ஈந்து,தமிழர் பண்பாட்டினை காத்து நின்றனர் நமது முன்னோர்கள். அது மொழிக்கான உரிமைப்போராக மட்டுமல்லாமல் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கலகக் குரலாகவும் இருந்தது. பார்ப்பனியத்திற்கு எதிரான அப்பண்பாட்டு போரில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் 25.01.2017 அன்று திருச்சி உழவர் சந்தை அருகே அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகளான  கீழப்பழுவூர் சின்னசாமி,  விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்களுக்கு தோழர்கள் சென்றனர்.
பு.மா.இ.மு தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு மற்றும் பெ.வி.மு.  தோழர்களுடன் சமஸ்கிருத்திற்கு எதிரான, BJP – RSS -ஐ விரட்டியடிக்க ,மொழிப்போர் தியாகிகளின் நினைவுதினத்தை ஏந்தி பிடிப்போம் என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்று மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்க்கு மாலைகள் அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பு.மா.இ.மு தோழர் பாவெல் “புதிய கல்விகொள்கை என்ற பேரில் சமஸ்கிருத திணிப்பு, குரு உற்சவ், பொங்கலுக்கு விடுமுறை ரத்து எனும் மோடி அறிவிப்பு, கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடுங்கள் எனும் நீதிபதியின் ஏளனம் என பல்வேறு வகையில் மத்திய மோடி அரசு தமிழக பண்பாட்டினை அழித்து தமிழகத்தில் ஊடுருவ பார்க்கிறது.
எப்படி இந்தி திணிப்புக்கு எதிராக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக  தமிழர் பண்பாட்டினைக் காக்க மாணவர் இளைஞர் படை அணி திரண்டதோ, அந்த அடிப்படையில் இன்று BJP,RSS- ஐ அடித்து விரட்டி ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நடத்தும் ஒரு நீண்ட வரலாற்றுக் கடமை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்திப்பேசினார்.
அடுத்ததாக பேசிய ம.க.இ.க மாவட்டச் செயலர் ,தோழர்.ஜீவா பேசியதாவது “இந்து இந்தி இந்தியா எனும் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற ஒவ்வொரு சந்து பொந்துகளிலும், மூலை முடுக்கெல்லாம் கழுகுப் பார்வையுடன் இந்த BJP-RSS கும்பல் காத்து கொண்டு இருக்கிறது. பெரியார் பிறந்த இந்த மண்ணில். இந்தி திணிப்புக்கு எதிராக உயிர் நீத்த இந்த தியாகிகளின் நினைவுகள் புதைக்கப்படவில்லை, அது நமது உணர்வில் விதைக்கப்பட்டுள்ளது, இந்த விதைகள் தேசிய இன கலாச்சாரத்தை அழித்து மனுநீதியை நிறுவத்துடிக்கும் BJP-RSS ஐ அடித்து விரட்டும் ஆலமரமாக வளர வேண்டும், அப்படியாக இந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தில் அனைவரும் சபதம் ஏற்போம் என கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக