புதன், 11 ஜனவரி, 2017

லக்ஷ்மி சரவணன் ;புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்.. எழுத்தாளர் ,பதிப்பாளர் ..


பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.
லக்ஷ்மி சரவணகுமாருடன் சென்னையில் உரையாடல் நிகழ்த்தியது தி டைம்ஸ் தமிழ்…உரையாடலின் ஒரு பகுதி வீடியோவாக கீழே தரப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளராக தான் பாதிப்பட்ட காரணத்தாலேயே பதிப்பகம் தொடங்கியதாக கூறும் சரவணகுமார், தான் பதிப்பிக்கும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கு புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன் என்கிறார். இந்த வீடியோவில்  பதிப்பகம் தொடங்கியதன் பின்னணி குறித்தும் பதிப்பகத்துக்கு ’மோக்லி’ என பெயர் வைக்க பிரத்யேக காரணம் குறித்தும்  தான் எந்த அளவுக்கு புரபஷனலா செயல்படப்போகிறேன் என்பதையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்…thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக