புதன், 11 ஜனவரி, 2017

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி.. 14 ஆண்டுகளில் கண்டிராத தோல்வி!

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 14 ஆண்டுகளில் இல்லாத தோல்வியைக் கண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்பாராத வெற்றியைக் கண்டிருக்கிறது.
31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 23 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ். 193 வட்ட பஞ்சாயத்துகளில் 113 இடங்களையும் காங்கிரஸ் வென்றிருக்கிறது. கிராமப்புறங்களில் பெரும் சரிவை சந்தித்திருக்கும் பாஜக ஆறு மாநகராட்சிகளிலும் வென்றிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டேல்கள், பாஜகவை தோற்கடிக்கும்படி பகிரங்க அழைப்பு விடுத்ததும் பணநீக்க நடவடிக்கை, ஆளும் பாஜகவினர் மீதான அதிருப்தி ஆகியவையே பாஜக தோற்றதற்கான காரணங்களாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
2001லிருந்து 2014 வரை மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தவரை, பாஜக தோல்வியே கண்டதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. 14 ஆண்டு காலத்துக்குப் பிறகு பெற்ற வெற்றி 2017-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறது காங்கிரஸ்! thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக