வியாழன், 12 ஜனவரி, 2017

ஸ்பெயினில் காளையை சுற்றி நின்று குத்தி கொல்வது பீட்டாவுக்கு விளையாட்டு? தமிழக ஜல்லிகட்டு கொடுமையா? பாசம் ?




நான் கூட! ஆரம்பத்தில் ஏதோ இது சின்ன பிரச்சனை தான்னு நினைத்தேன் ஆனால் போக போக பார்க்கும் போது தான் புரிகிறது இது உலக நாடுகள் இந்தியாவிற்கு எதிராக நடத்தும் அமைதி போர் என்று.
பீட்டா! என்பது ஒரு சர்வதேச அமைப்பு அது ஏன் ஸ்பெயினில் தடை செய்யாமல் இந்தியாவில் அதுவும் தமிழகத்தின் மீது கை வைக்கிறது என்று யோசிக்கும் போது தான் நம்மை சிந்திக்க வைக்கிறது.
உலக! நாடுகளில் ஏதோ! ஒரு நாட்டிற்கு மருத்துவ குணமும் ஆரோக்கியமும் நிறைந்த நம் நாட்டு மாட்டு பாலின் காப்புரிமையை பெறத்துடிக்கின்றது.
அதுவே! காரணம் குறிப்பாக ஜல்லிக்கட்டு மீது காளைகள் மீது கை வைக்க.
இப்போ! ஆயிரம் ஐநூறு ரூபாய் ரத்து செஞ்சாங்க! இதுக்கு முன்னாடி ரத்து இல்லை அதை தாராளமா பயன்படுத்தினோம் பாதுகாத்தோம். ரத்தான பிறகு நம் கையில் ஆயிரமோ ஐநூறு இருந்தாக்கூட இனி பயனில்லைன்னு குப்பைல! தான் போடுவோம்.


அதே! நிலை தான் இப்போது ஜல்லிக்கட்டு இருந்த வரை காளைகளை வளர்த்தோம் பாதுகாத்தோம் ஜல்லிக்கட்டு ரத்து எனும் போது காளைகளை வளர்க்க முன்வரமாட்டோம் கன்றுலேயே! அடிமாட்டுக்கு கொடுத்துடுவோம்.
கன்றை! அடிமாட்டுக்கு விட்டுட்டா! அப்போ இனவிருத்தி தடை பட்டுவிடும் நாட்டு மாடுகள் அழிந்து விடும்.
ஒரு நாட்டோட! கலாச்சாரம் மொழி அடையாளத்தை அழிச்சிட்டா! அந்த நாடு காலி சீனாக்காரன் சொன்னது.
எனக்கு இப்போ! கோபம் எல்லாமே! எல்லாமும் வெளிபடையா! தெரிஞ்சும் எவனோ! கொடுக்கும் எச்சை காசுக்கு நம் அடையாளத்தை அழிக்க நம்ம நாட்டுகாரனே! காட்டியும் கூட்டியும் கொடுக்கின்றானே! என்பது தான்.
நம்ம! வீட்டுக்கே! நாம் பெட்ரோல் பாம் போட்டுக்கொள்கிறோம் என இவர்களுக்கு புரியவில்லையா?
தமிழர்கள் காட்டுமிராண்டிகள் மிருகங்களை வதைக்கிறார்கள் என குரல் எழுந்த போது சுதாரிச்சிருக்கனும்.
#பூவை_செழியன்...... முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக