புதன், 25 ஜனவரி, 2017

சகாயம் தலைமையில் புதியகட்சி ? போலீஸ் வெறியாட்டத்துக்கு இதுதான் காரணம்?

சென்னை மெரினா போராட்டத்தின் போது மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஐ.ஏ.எஸ் சகாயத்தின் தலைமையில் புதிய கட்சி தொடங்க முடிவெடுத்துள்ளனர்.
அந்த புதிய கட்சிக்கு காளையை சின்னமாக பெறுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால்தான் போலீசாரின் தடியடிக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், பெண்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மெரினா கடற்கரையில் பல லட்சம்பேர் ஒன்றுகூடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த அறப்போராட்டம் நாடுமுழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டம் நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சியனர் மற்றும் சினிமா நடிகர்களை மாணவர்கள் புறக்கணித்தனர்.
போராட்டம் எந்தவிதமான சர்ச்சையும் இன்றி ஒரு வாரமாக நடைபெற்றது. அதன் பின்னரே ஆளுநர் மூலம் அவசர சட்டம் பிறக்பிக்கப்பட்டது.
ஆனால் மாணவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுக்கு நிரந்தர சட்டம்தான் வேண்டும் என்று தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிரந்தர சட்டத்தை நிறைவேற்றுகிறோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினார். இதன் மூலம் மாணவர்களின் வெற்றி உறுதி ஆன நிலையில் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக மாணவர் அமைப்பு முடிவு செய்தது.
ஆனால் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மாணவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். தங்களை போராட்டத்தில் நுழைய விடாமல் அவமதித்து விட்டதாகவும், மேலும் சகாயத்தின் தலைமையில் புதிய கட்சியை தொடங்க ஆலோசனையில் மாணவர்கள் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இதன் காரணாக மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைத்து அவர்கள் மீது வீண்பழி வர வேண்டும் என்ற நோக்கில் போலீசாரை வைத்து திட்டமிட்டு வன்முறை சதியை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக