புதன், 25 ஜனவரி, 2017

மார்கண்டேய கட்ஜு :தமிழக மக்களுக்கு பாராட்டு ! முழு இந்தியாவுக்கே நீங்கள் தான் வழிகாட்டிகள்

புதுடில்லி: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவு: தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்.இந்த போராட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தபோதிலும் சாதி, மத எல்லைகளை தகர்த்து துணிச்சலுடன் உறுதியாக வெற்றி கண்டுள்ளீர்கள். ;ஒட்டுமொத்த இந்திய மக்களும் உங்களிடமிருந்து பாடம் கற்பார்கள். அவர்களுடைய வளமான வாழ்க்கைக்கு தடைகளை தகர்க்க உங்களை முன்னுதாரணமாக எடுத்துகொள்வார்கள்.தமிழ் மக்கள் வாழ்க!இவ்வாறு அவர் கூறியுள்ளார் தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக