ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு :முகநூல் மூலம் திரண்ட மக்கள் ! மிரண்ட மத்திய - மாநில அரசுகள்!


ஒருபக்கம் ஜல்லிக்கட்டுகாக பேரணி, ஒரு பக்கம் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் என இளைஞர்கள் கலக்கி வருகின்றனர்.
விவசாயிகளின் உயிரிழப்புகளை அறிந்து மத்திய, மாநில அரசுகளும் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கின்றனர். வறட்சி பாதித்த நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளின் உயிரிழப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னால் அமைச்சர்கள் வறட்சியால் விவசாயிகள் உயிரிழக்கவில்லை, வயது முதிர்ச்சியால் உயிரிழக்கின்றனர் என கூறுகின்றனர். இதுதவிர பாதித்த நிலங்களை சரியாக ஆய்வு செய்யவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு, விவசாய பிரச்னைக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் சென்னை சேப்பாக்கம், மற்றும் மெரினாவில் இளைஞர்கள் ஒன்றாகத் திரண்டு பேரணி மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி இளைஞர்கள் கடல் அலை போல் குவிந்தனர். இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லமால் சென்னை இளைஞர்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இதனால் காவல் துறையினர் செய்வதறியாது திகைத்தனர்.
அதேபோல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 105-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் குடுமபங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், இனி இதுபோல் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினர்.
தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், விவசாயிகளை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு திரைப்பட இயக்குநர்கள் அமீர், கவுதமன் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுகாக திரண்ட இளைஞர்களும், விவசாயிகள் இறப்புக்காக திரண்ட இளைஞர்களும் ஒன்று கூடியாதால் மெரீனா கடற்கரை மக்கள் அலை போல் காட்சியளித்துள்ளது. இதனால் காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியால் திகைத்து நின்றார்கள்.
இவர்கள் அனைவரும் வாட்ஸப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலம் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. minnambalam.con

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக