வெள்ளி, 6 ஜனவரி, 2017

சசிகலா முதல்வர் ... பன்னீர்செல்வம் சபாநாயகர் ..




மின்னம்பலம்:  பொதுச்செயலாளர் ஆகி விட்ட சசிகலாவை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடராஜன் குழுவினர். சூட்கேஸ் ஜோதிடரின் கணிப்புக்காக காத்திருக்கும் அதே நேரம்.பன்னீர் செல்வத்தை அதிமுகவின் எந்த இடத்தில் வைப்பது என்ற ஆலோசனையில் தீவிரமாகியிருக்கிறார்கள் சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் , ஆகியோர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் பதவி இல்லை என்று முடிவெடுத்த இவர்கள். பன்னீர் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்.கட்சியிலும் ஆங்காங்கே மாவட்டம் தோறும் அவருக்கு நம்பிக்கையான ஆட்களை உருவாக்கி விடுவார்.அது பின்னாட்களில் நமக்கு சங்கடங்களை உருவாக்கும் அதனால் பொருளாளர் பதவியில் இருந்தும் பன்னீரை விலக்கி வைப்பதுதான் நம் எதிர்காலத்திற்கு நல்லது என முடிவெடுத்திருக்கிறார்கள். பன்னீருக்கு ஜெயலலிதா வழங்கிய அதிமுக பொருளாளர் என்ற கட்சிப் பதவியையும் பறிக்க முடிவு செய்துள்ளார்கள்.

இதை முன்பே அறிந்த பன்னீர்செல்வம் கடந்த 2-ஆம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து விட்டு போயஸ் கார்டனுக்குச் சென்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்ததோடு “என்னை சந்தேகப்படுறீங்க, எனக்கு கட்சிப்பதவியான பொருளாளர் பதவி கூட வேண்டாம்” என்று கவலையோடு பேசினார். அப்போதைக்கு சைலண்டாக இருந்தவர்கள் பின்னர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேரடியாக முதல்வர் பதவியையும், கட்சிப்பதவியையும் பறித்தால் அதை கட்சியினரே ரசிக்கமாட்டார்கள். அதனால் அவரை சபாநாயகர் ஆக்கி விடலாம். ஏற்கனவே சபாநாயகராக இருக்கும் தனபாலை அமைச்சராக்கி விட்டு பன்னீரை சபாநாயகர் ஆக்கி விட்டால் நியாயமாக நடந்து கொள்வது போன்ற தோற்றமும் கிடைக்கும். பன்னீரை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது மாதிரியும் ஆகி விடும். பன்னீர் சபாநாயகர் ஆகி விட்டால் பொருளாளர் பதவியை ராஜிநாமே செய்தே ஆக வேண்டும். அது மட்டுமல்ல கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் முடியாது. ஆக மொத்தம் முதல்வராக இருந்த பன்னீர் சபாநாயகர் ஆகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக