சனி, 14 ஜனவரி, 2017

நடிகை திரிஷாவிடம் வீரத்தை காட்டிய ஜல்லிகட்டு தமிழர்கள் ... பாஜகா கும்பலிடம் ஏன் வீரத்தை காட்டவில்லை?

தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கும் நான் தமிழன் என்று சொல்வதற்கும் நீங்கள் வெட்கப்படுங்கள் என த்ரிஷா கூறியுள்ளார். நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என நேற்று சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்று வைரலாக பரவியது. இதற்கு நடிகை த்ரிஷா டுவிட்டரில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். ;பீட்டா அமைப்பின் தூதுவராக இருக்கும் நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என நினைத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று காரைக்குடியில் அவர் கலந்துகொண்ட படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் எயிட்ஸ் பாதிக்கப்பட்டி இறந்தார் எனவும் அவரது குடும்பத்தையும் விமர்சித்து போஸ்டர் வெளியிட்டு த்ரிஷாவை சீண்டினர்.
இதனால் கடும் கோபமடைந்த த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி மோசமாக சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். That bein said,I am shocked n mortified at d haters n d kind of filthy language bein used jus bcoz u have free access 2 social media. — Trisha Krishnan (@trishtrashers)  ;மரியாதைக் குறைவாக ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் பேசுவது தான் தமிழ் கலாச்சாரமா? தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கும் நான் தமிழன் என்று சொல்வதற்கும் நீங்கள் வெட்கப்படுங்கள் என த்ரிஷா கூறியுள்ளார்.வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக