சென்னை மெரினா கடற்கரையில் இரவு முழுக்க போராட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு சாப்பாடு வழங்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மெரினாவில் விடியவிடிய போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் மதியத்திலிருந்தே சாப்பிடவில்லை. இவர்களுக்கு சாப்பாடு வினியோகிக்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. சென்னை வெள்ளத்தின்போது இப்படிதான் சக மக்களுக்கு, உதவிகள் சோஷியல் மீடியா வாயிலாக குவிந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
உணவு
மெரினாவில் போராட்டம் நடத்துவோருக்கு உணவு தேவைப்பட்டால் இந்த தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு பட்டியலை இந்த நெட்டிசன் வெளியிட்டுள்ளார்.
சாப்பாடு ரெடி
போராட்டக்காரர்களுக்கு சாப்பாடு தர எழும்பூரிலுள்ள ஒரு ஹோட்டல் தயாராக உள்ளதாகவும் அதை வாங்கிச் செல்ல தன்னார்வலர்கள் வரலாம் எனவும் கூறுகிறது இந்த டிவிட்.
படத்தில் மட்டுமல்ல
கத்தி போன்ற சினிமா படத்தில் மட்டுமல்லாது, நிஜத்திலும் பொதுப் பிரச்சினைக்கு நடிகர் விஜய் குரல் கொடுத்துள்ளார் என கூறி புகழ்கிறது இந்த டிவிட்.
தமிழகமே குலுங்குகிறது
தமிழ்நாடு முழுக்க போராட்டம் பரவியுள்ளதை ஆங்காங்கு உள்ள புகைப்படங்கள் மூலம் தொகுத்து வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
ஊமை அரசு
ஊமை அரசு, கொடுமையான காவல்துறை, மீடியா (தேசிய) புறக்கணிப்பு நடுவே தமிழகம் என டிவிட் செய்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக