புதன், 18 ஜனவரி, 2017

பாகிஸ்தான் .. மகளை ஆணவ கொலைசெய்த தாய்க்கு மரணதண்டனை


பாகிஸ்தானில் சொந்த மகளை கெளரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்த பர்வீண் பீபி என்பவரின் மகள் ஜீனத் (வயது 18),கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, ஜீனத் கணவருடன் வசித்துவந்த சமயத்தில், அவரது தாய் பர்வீண் மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி திருமண வரவேற்பு நடத்துவதாக கூறி அழைத்து வந்தனர். பின்னர் ஜீனத்தை அவரது தாய் பர்வீண் மற்றும் சகோதரர் அனீஸ் ஆகியோர் தாக்கியதுடன், பர்வீண் தனது மகள் ஜீனத் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார்.இதில் ஜீனத் உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகளை கெளரவ கொலை செய்த பர்வீணுக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. பாகிஸ்தானின் பாராளுமன்றம் கெளரவ கொலைக்கான தண்டனையை கடுமையாக்கி புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக