செவ்வாய், 31 ஜனவரி, 2017

கனிமொழி: ஜல்லிகட்டு வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்!

நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை குறித்து
கேள்வி எழுப்புவோம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியில், "பாராளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசுவோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வலியுறுத்துவோம்.நதிநீர் பிரச்சினை குறித்து முக்கியமாக அதில் விவாதிக்கப்படும், தமிழகத்தில் ஏற்பட்ட ‘வார்தா’ புயல் பாதிப்பை மத்திய குழு ஆய்வு செய்து முடித்து உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிவாரண உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை மத்திய குழு ஆய்வு செய்து முடித்து இருக்கிறது. அதற்கு வேண்டிய நிவாரணத் தொகையையும் விரைவில் மத்திய அரசு வழங்க வேண்டும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக