செவ்வாய், 31 ஜனவரி, 2017

பிப்ரவரி 24, தீபா போயஸ் கார்டனில் குடியேறுகிறார்? சசிகலா தீபா டீல் மேக்கிங்?

சசிகலா தரப்பு தீபா தரப்புடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் ஜெயலலிதாவின் ஏராளமான சொத்துக்களில் தீபாவுக்கு இருக்கும் பாத்தியதை மற்றும் தற்போது அவருக்கு இருக்கும் செல்வாக்கினாலும் தீபாவுடன் சமரசமாகி விட்டதாகவும் செய்திகள்
பாரதப் பிரதமர் மோடி ஒரு முடிவிற்கு வந்து விட்டார். சசி குடும்பத்தினர் போயஸ் கார்டனில் இருக்க கூடாது. காஞ்சி மடமும் அதற்கான பணபலம், படைபலம் தரத் தயாராகிவிட்டது. எல்லாம் ரெடி. மக்கள் ஆதரவும் அதாவது ஜெ. விசுவாசிகள் அனைவருமே தீபா பின்னால் அணிதிரளத் தயாராகி விட்டனர். பிப்ரவரி ஐந்தாம் தேதி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யும் ஜெ.தீபா, பிப்ரவரி 24 ஜெ., பிறந்த நாளில் திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கட்சி பெயர், கொடி போன்றவற்றை அறிமுகம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் போயஸ் கார்டன் சட்டப்படி தனக்கே சேர வேண்டும் என்றும் தீபா கூறியிருந்தார்.ஏனெனில் அந்த வீடு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியது. சந்தியா வாங்கிய சொத்து அதன் பின்னர் அவரின் பேரப்பிள்ளைகளை சேர வேண்டும். அதனால் போயஸ் கார்டன் சட்டப்படி தீபாவுக்கே சேரும். அதனால், தீபா போயஸ் கார்டன் செல்லவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நடக்கும் என்று எதிர் பார்க்கும் சசி தரப்பும், தங்கள் மன்னார் அன்ட் கம்பெனி படைபலத்துடன் சந்திக்கத் தயாராக இருப்பதாக கூறுவதால் சென்னையில் அன்று பதட்டம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆனால், முதல்வர் பன்னீர் ஆதரவு தீபாவிற்கு தான் இருக்கும் என்றும் அடித்துக் கூறுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்... இதெல்லாம் வெளியில் கூறப்படும் விடயங்கள் ஆனால் சசிகலா தரப்பு தீபா தரப்புடன்  ஓர் உடன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் ஜெயலலிதாவின் ஏராளமான சொத்துக்களில் தீபாவுக்கு இருக்கும் பாத்தியதை மற்றும் தற்போது அவருக்கு இருக்கும் செல்வாக்கினாலும் தீபாவுடன் சமரசமாகி விட்டதாகவும் செய்திகள் உலா வருகிறது . எது உண்மை எது வெறும் வதந்தி என்று  கூற முடியாமல் உள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக