செவ்வாய், 3 ஜனவரி, 2017

நடிகர் பாஸ்கர் :இனியாவது முட்டாள்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் எதிர்மறையாக விமர்சித்தார்.< இதற்கு நிறைய பாராட்டுகளும், கண்டனங்களும் வந்தது. பாஸ்கரை தொலைபேசியில் மிரட்டினார்கள். மீண்டும் ஒரு அறிக்கை விட்டுள்ளார் பாஸ்கர். ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் கொடுக்கனும், ஜெயா மறைந்த நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.< பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என சசிகலா தலைமையிலான அதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.< இதில் உண்மையென்னவெனில், மறைந்த ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட மாட்டாது. அதற்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக உள்ளது. விவாசயிகள் தினம் ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது. பாரதரத்னா விருது ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அடைந்தவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல. அதுவும் மறைந்த முதல்வர் மேல் 15 க்கு மேற்ப்பட்ட ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்த தகவல். நீங்கள் முட்டாள் தனமாக தீர்மானம் போட்டு விட்டு அதைக் கண்டிக்கும் என்னைப்  போன்ற மக்களையும் முட்டாளாக்கி வருகிறீர்கள். இதிலிருந்து நாங்கள்  அறிய வேண்டியது, இதுப்போன்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் தான் முதலைமைச்சர், 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் , 133  நாட்டின் நிர்வாகப் பொறுப்பை கவனிகிறார்கள் என்பது வேதனையின் உச்சம்.
படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்போது தான் மக்கள் தெளிவாக சிந்தித்து அறிவாளிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
முட்டாள்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார். என்னை மிரட்டாதீர்கள். நான் பயப்படும் ஆள் இல்லை என்கிறார் பாஸ்கர்.லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக