செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஜெயலலிதா மறைந்ததும் குளிர் விட்டுப்போன நித்தி ... ஆட்டாமா? கொண்டாட்டமா ?

அந்த சுவாமி கொஞ்சம் அடங்கியே இருந்தார். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை.தான் உண்டு தனது ஆசிரமம் உண்டு இருந்தார். ஆனால், ஜெ., இறந்த பின் அவருக்கு மீண்டும் ஜாலி மூட் வந்து விட்டது என்கிறார்கள். தீபாவளி முதலே பரபரப்பாக காணப்பட்டது அவரு ஆசிரமம். வெளிநாட்டு பக்தர்கள் வரவும் அதிகம் ஆகிவிட்டது. வாராவாரம் ஆரவாரம். நடு இரவு பூஜைகள். ஆசிகள், அருள் உரைகள், ரிலாக்ஸ் ஆட்டம் என தூள் கிளப்பினார்கள் சுவாமியும் பக்தர்களும். இந்த விஷயங்களில் நடிகைக்கும் சாமியாருக்கும் பிரச்னை ஆரம்பித்தது என்று ஒரு வார இதழ் எழுதியது. பிரச்னை முற்றியதாம். நடிகை அடிக்கடி கோபித்துக் கொண்டு இன்னொரு ஊரில் உள்ள ஆசிரமம் சென்று உட்கார்ந்து விடுவாராம். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதிலும் நடிகை கலந்து கொள்ளவில்லை.
இன்னும் குஷியாகிப் போனார் சுவாமிகள். ஆடித் தீர்த்து விட்டார்கள். கட்டிப்புடி நடனங்கள்,கட்டிப்புடி ஆசிகள் என அனல் பறந்தது ஆசிரமம். ஆனால், இன்னொரு பத்திரிக்கையோ நடிகை அவ்வளவு எளிதாக அங்கிருந்து போய் விட மாட்டார். அவரை அமெரிக்காவில் உள்ள ஆசிரமத்தை சரி செய்யவும், சீரமைக்கவும் சுவாமிகள் அனுப்பி உள்ளார் என்கிறது. என்ன கொடுமையோ போங்க..!  லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக