ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஜல்லிகட்டுக்கு உள்ளாட்சி அமைப்புகளே சட்டப்படி அனுமதி அளிக்கலாம்! எப்படி? இப்படித்தான்!

வீட்டுமனையை அங்கீகரிக்கவும், குழாய்ல தண்ணீர் வரலைன்னா சொல்றதுக்கும், மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் இல்லீங்க. அதையும் தாண்டி அரசியல் சாசனத்தை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் அது உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நம்மில் பலர் சரியாக புரிந்து கொள்ளாமல் போனதன் விளைவு பல இன்னல்கள்: ஏற்பட்டுக்கொண்டிருகின்றன. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் 24.4.1993 அன்று செய்யப்பட்ட 73வது திருத்தத்தின் படி உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்புகளாக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திற்கும் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அதன்படி இயற்றப்படும் தீர்மானங்கள் சட்டங்களாகவே மதிக்கப்படும். எனவே, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் (ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்ச நீதி மன்றத்தினாலும் ஒன்றும் செய்ய இயலாது. “மாடுபிடி விளையாட்டுக்காக – ஜல்லிகட்டிற்காக – ஏறு தழுவுதலுக்காக ” கிராமசபை கூட்டி தீர்மானித்தால் மத்திய மாநில அரசு சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது, எனவே அதன் அடிப்படையில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி ஜல்லிகட்டை ஜாம்ஜாமென்று நடத்தலாம். பீட்டா அமைப்பை ஓட ஓட துரத்தலாம்.. செய்வீர்களா? செய்வீர்களா!  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக