ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஆந்திராவில் 100க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஜல்லிகட்டு ! சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் தடையை மீறி அட்டகாசம் !




Jallikattu held in AP’s CM hometown செகந்திராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் விரட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதுதொடர்பான போராட்டமும் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.




தமிழ் நாட்டில் பரபரப்பாக இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு ஆந்திர மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் தடையை மீறி மாட்டுப் பொங்கலான இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதுவும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான நாராவாரிபள்ளியில் அவரது வீட்டிற்கு அருகில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதில் நூற்றுகணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனர். மேலும், இதனைக் காண நூற்றுக் கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் ஆந்திராவிலும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக