செவ்வாய், 24 ஜனவரி, 2017

இந்த பிள்ளைகள் கடலுக்குள் இறங்குவதை பார்த்ததும் மனசு கேட்காம ஓடி வந்தோம். ... மீனவ தாய்மார்கள்

இந்த பிள்ளைகள் கடலுக்குள் இறங்குவதை பார்த்ததும் மனசு கேட்காம ஓடி வந்தோம். இவனுங்களுக்கு கடலை பத்தி என்ன தெரியும்.. சொல்லுங்க" என்று பதறியடித்து கூட்டம் கூட்டமாக மாணவர்களை நோக்கி ஓடிவந்த மீனவ மக்களின் பொறுப்பும், அக்கறையும், கவனிப்பும்...ஏன் அரசுக்கும், காவல்துறையினருக்கும், அவர்களை வழிநடத்தியதாகச் சொல்லப்படும் சினிமாத்துறையினருக்கும் இல்லை? என்பதே நாம் மீண்டும் மீண்டும் இங்கு கேட்கவேண்டிய கேள்வி.
முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் அவசர சட்டம் குறித்தது அரை மணி நேரத்திற்கும் மேலாக விளக்கினார்., அதற்கடுத்து வந்த சட்ட வல்லுனர்கள் குழு அவசர சட்டம் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்காக போடப்பட்ட பொதுநலவழக்கு பற்றியும் எடுத்துரைத்த பின்னரே மாணவர்கள் சற்று அமைதியாயினர். மாணவர்களிடம் பேசுவதற்கு, அவர்களின் நம்பிக்கை பெற்ற ஒரு தலைவர்களைையும் அங்கு பார்க்க முடியாதது பெரும் வேதனை. கூட்டத்தில் தனித்தனியாக அவர்கள் இருந்தாலும் அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிரமம் ? அதற்காக நேரம் செலவழிப்பதில் என்ன பிரச்சனை ? அதை விட எளிது கூட்டத்தை அடித்து கலைத்துவிடலாம் என்பது மிகத்தவறான எண்ணமும், அணுகுமுறையும்தானே?
இந்த இடத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டிய வேலைகளை செய்யும் ஊடகத்துறையினரை மாணவர்களும் மதிக்கவில்லைதான். ஆனால் அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிடுவதா ? அங்கிருந்த ஊடகத்துறயைினர் விஜய்ஆனந்த், நியாஸ்அகமது, களப்பணியாளர் செல்வி ஆகியோரின் முயற்சியில்தான் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் அங்கு வந்தார். அவர் வருவதாகச் சொன்னதும் காவல்துறையினரும் வாகனத்தை அனுப்பி அவர்களை வரச்சொல்கிறோம் என்று நடவடிக்கை எடுத்தனர். இந்த பொறுப்பு நடுக்குப்பத்திலும் மற்ற இடங்களிலும் வன்முறையை கையிலெடுத்த காவலர்களுக்கு இல்லாமல் போனதேன் ?
இரவு வரைக்கும் மெரீனாவில் இருந்த காவலர்கள் யார் யார் பேச வருகிறார்களோ அவர்களை அனுமதித்தனர்... அதே போல் "இங்கு போராட்டத்தை தவிர வேறொன்றும் தெரியதாவர்கள் உட்புகுந்துவிட்டீர்கள், நீங்கள் பலிகடா ஆகிவிட்டீர்கள்" என்ற கலைத்தல் நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
ஊடகத்துறயைினரிடமும், மாணவர்களிடமும் வந்து வந்து பேசிக் கொண்டிருந்த செல்வி தோழரை மாணவர்கள் ஒரு கட்டத்தில் அனுமதிக்கவில்லை. வெளியே போ என்று விரட்டிவிட்டனர். ஆனாலும் அவர்கள் நம் பிள்ளைகள். அவர்களுக்கு இந்த அரசு பற்றியும், சட்டம் பற்றியும், அதன் இயங்குமுறை பற்றியும் எந்த புரிதலும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். நாம்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். எந்த பள்ளிக்கூடத்தில் அவர்கள் அரசியல் படித்தார்கள்.. அவர்கள் இப்போது அரசியலை பற்றி தெரிந்து கொள்வதற்கு. இப்போது இவர்கள் தடியடிக்குள்ளாகமால் இங்கிருந்து வெளியேற வேண்டும். அடுத்தும் இது போன்ற போராட்டத்திற்கு வரவேண்டும். அதைத்தான் முதலில் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். அதீத பொறுமை வேண்டும்தான்...? ஆனால் யாருக்காக செய்கிறோம் ?
அரசியல் கற்றறிந்த இவர் போன்றோர் கூறியதற்கும், யதார்த்தமான முறயைில் மாணவர்களை பாதுகாக்க வந்த மீனவ மக்களுக்கும் பெரிதும் வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை.
போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்களுக்கும், அல்லது அதை தலைமைத் தாங்குபவர்களுக்கும், அல்லது அதை வழிநடத்துபவர்களுக்கும் போராடுபவர்கள் மீதான பொறுப்பும், அக்கறையும், அன்பும் அவசியம் என்று உணர்ந்த தருணம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் இருப்பது கடுமையான எரிச்சலை மூட்டினாலும், காலம் தாழ்ந்தாலும் போராடுபவர்களை பேச்சுவார்த்தைக்கு உடன்பட வைக்க வேண்டியதுதான் ஒரு பொறுப்புள்ள ஜனநாயகத்தன்மைவாய்ந்த அரசின், களப்பணியாளர்களின், ஊடகத்துறயைினரின், கடமையாக இருக்கமுடியும். மிக ஐடியலாக இருந்தாலும் அதை நோக்கித்தான் முன் நகர வேண்டும் என்பதில் நமக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருக்கமுடியுமா ?
மெஷின்களை வாங்கிப்போடுவது அதிக செலவுப்பிடிக்கும் ஒன்று, அதற்கு பதிலாக குறைந்த கூலி கொடுத்து நாட்டின் சாக்கடைகளை மனிதர்களை, தலித்துகளை வைத்து சுத்தம் செய்யும் அரசின் அசிங்கம் போன்றதுதான் அடக்குமுறையும், தடியடியும்...  முகநூல் பதிவு   இளமதி சாய்ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக