செவ்வாய், 24 ஜனவரி, 2017

காயப்பட்டவர்களுக்கு fit for remand எழுதி தருமாறும் மருத்துவர்களை மிரட்டும் போலீஸ் .. ..

நேற்று இரவில் லாயிட்ஸ் ரோடு பகுதி குப்பத்தில் போலீஸ் வீடு வீடாக சென்று 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சக்கையாக உதைத்து மயிலை ஸ்டேஷனில் வைத்து மீண்டும் நொறுக்கி, 27 பேரை ரிமாண்ட் செய்து விட்டனர். சாலையில் நின்றவர்களும் இதில் அடக்கம். பெற்றோருக்கு தகவல் கூட இல்லை. ஒவ்வாரு ஸ்டேஷனாக போன் செய்து பெற்றோர் மன உளைச்சல். பிறகு தகவல் தெரிந்து போனவர்களை உள்ளே விட மறுப்பு. பிறகு கட்சி சார்பில் செல்வா, குமார் உட்பட போய் வாக்குவாதம். நமது வழக்கறிஞர்கள் சென்று நீதிபதியிடம் பேசிய பிறகு காயங்கள் இருப்பதால் ரிமாண்ட் செய்ய மறுத்து ராயப்பேட்டை அழைத்து செல்ல உத்தரவு. தகவல் தெரிந்து நானும் செல்வாவும் போனோம். உறவினர்கள் கதறிய கதறல் கொஞ்சமல்ல. ஒரு வீட்டில் திருமணம் நின்று விட்டது. கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய போகிறோம் என்கின்றனர். பிறகு மருத்துவ அதிகாரியை பார்க்க சென்றோம். இரண்டு காவலர்கள் fit for remand என்று எழுதி கொடுக்கும்படி மருத்துவரை வற்புறுத்தினர். நாங்கள் பெரிய பிரச்னை செய்தோம். நமது வழக்கறிஞர்களும் தகராறு செய்தனர். பிறகே காவலர்கள் வெளியே வந்தனர். பரிசோதனை நடக்கிறது. முகநூல் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக