ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நடராஜன் வழங்கிய வைகோவின் தூதில் சசிகலாவிடம் நெகிழ்ந்த சம்பத் ..

வைகோவை பொறுத்தமட்டும், நடராஜனின் உயிர் நண்பராவர் (அதாவது நடராஜனின் பேலிஸ்டில் இருப்பவர். நெடுமா, சீமா போல) . நடராஜன் கிழிக்கும் கோட்டை தாண்ட வேண்டும் என்று நினைக்ககூட மாட்டார். 
தவிடு நெல் ஆகிவிட்டது, வான்கோழி மயிலாகிவிட்டது என்றெல்லாம் ரெய்மிங்கா வாரிதூற்றிய நாஞ்சில் சம்பத். தற்போது மீண்டும் அ.தி.மு.க.வில். அதுவும் சசிகலாவின் நெகிழ்ச்சியின் கீழ். சரி, வான்கோழியையும், தவிடையும் அவர் உதாரணம் சொன்ன
ஒருவாரத்துக்கு முன் அ.தி.மு.க. அவருக்கு கொடுத்த காரை திரும்ப ஒப்படைத்தார். அதனால் சம்பத் சசியைத்தான் விளாசுகிறார் என்பது எல்லாராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது, ஏன் சசிகலாவின் வரவு சம்மபத்துக்கு பிடிக்கவில்லை, எதுவுமே நிகழாமல் வெடுக்கென்று இம்முடிவை எடுக்க காரணம் என்ன என்று பலரின் புருவம் உயர்ந்தது.
வைகோதான் காரணம் என்று விடை தெரிந்த போது ப்பூ…. இவ்ளோதானா அதை சரி செய்துவிடலாம் என்றார்களாம் சிலர். அதெல்லாம் வேண்டாங்க, அவருக்கு என்ன பிரச்சனை என்றாலும் சொல்லிவிட்டுத்தானே வண்டியை ஒப்படைக்க வேண்டும். சம்பத்தை வைகோ துரத்திய போது அன்பாக அவரை தன் கட்சியில் சேர்த்துக்கொண்ட அ.தி.மு.க.வுக்கு அவர் காட்டுகிற விசுவாசமா இது? என்பது ஒருசாரார் கருத்து. சம்பத்தை அழைத்து பேசி பாருங்க, படியலைன்னா வைகோவை விட்டு பேசுங்க என்று மற்றொரு சாரர் சொன்னதாகவும் தகவல் உண்டு. வைகோவை பொறுத்தமட்டும், நடராஜனின் உயிர் நண்பராவர். நடராஜன் கிழிக்கும் கோட்டை தாண்ட வேண்டும் என்று நினைக்ககூட மாட்டார். அதனால அவரிடம் சொல்லி சம்பத்தை அ.தி.மு.க.விலேயே இருக்கச்சொல்லுங்கள் என்று நடராஜன் உத்தரவிட்டாராம். அதனடிப்படையில் மல்லை சாத்தையா மூலமாக சம்பத்துக்கு தூதுவிட ஏற்பாடு செய்தாராம் வைகோ அதான் இந்த ரீ எண்டரி. அப்படின்னா… அ.தி.மு.க., தற்போது ம.தி.மு.க.வின் கூடாராமாக மாறிவருகிறதா? லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக