செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜெ.தீபா : எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்:

சென்னை தியாகரார் நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று காலை தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. உடல்நலக் குறைவு காரணமாக ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது என்ற செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருதற்குள் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது.
இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள், நம் நாட்டை வல்லரசாக நிர்ணயிக்கக் கூடிய மக்கள், நம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை பெற்ற இளைஞர்கள் என பல தரப்பினர் நான் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். நான் எளிய முறையில் வாழ்க்கையை நடத்தும் சாதாரண குடும்ப பெண். இதழியல் படித்து பத்திரிகையாளராக சில காலம் பணியாற்றியவள்.
எனக்கென்று குடும்பம், தனிவாழ்க்கை என சில பொறுப்புகள் இருக்கிறது. இருப்பினும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை மக்கள் பணியாற்ற அழைப்பு விடுத்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் மக்களுக்காகவும், தொடர்ந்து உறுதியோடு பணியாற்றுவேன். என் தாய்வீடான தமிழ்நாடும், தாய் மொழியான தமிழ்மொழியும் என் இரு கண்களாக இருக்கும். நான் வாழ்நாளில் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அர்ப்பணித்து ஏழை, எளியோருக்கு உதவிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அவர்கள்ன் பாதசுவடுகளின் வழிநடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். மேலும், மக்கள் கருத்துகளையும், தொண்டர்களின் கருத்துகளையும் சேகரித்து விட்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதியன்று தமது அரசியல் பயணம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். படங்கள்: அசோக்குமார் nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக