ஞாயிறு, 29 ஜனவரி, 2017

மெரீனாவில் ஆர் எஸ் எஸ் வெற்றி ஊர்வலம்? ஜல்லிகட்டு.. மக்களை அடித்து நொறுக்கியதை கொண்டாடுறாங்க..

டான் அசோக் ;கேள்வி :- ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக இருந்தும் பாஜகவில் இல்லாமல் வேறுகட்சியில் இருந்து வளர்ந்து உயர்ந்து உயர் பதவியை எட்டியவர் நரசிம்ம ராவ். அதைப்போல ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக இருந்து உயர் பதவியை வேறுகட்சியில் எட்டியவர் என்ற பெருமைக்குரியவர் பன்னீர்செல்வம் என்று சொல்லலாமா?
பதில்: ஆம். நரசிம்மராவ் எப்படி பாஜக பாபர் மசூதியை இடிக்கும்போது பார்த்துக் கொண்டிருந்தாரோ அப்படித்தான் ஓ.பி.எஸ்சும் மெரினா கலவரத்தையும், இன்று ஊர்வலத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
 mathavaraj 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று காவல்துறையின் அனுமதியோடு சென்னையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தி இருக்கிறது.
இந்த தேசத்துக்கும். தேச ஒற்றுமைக்கும், மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகள் தங்கள் அணிவகுப்பைக் காட்டுவது ஏனென்று புரிகிறது.
இளைஞர்களின் எழுச்சி, அதையொட்டி அரசு முன்வைக்கும் தேச விரோத குற்றச்சாட்டுகள், மீண்டுமொருமுறை இளைஞர்கள் கூடிவிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் மெரினா தடை ஆகிய நிகழ்வுகளுக்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஊர்வலம் எளிதில் கடந்துவிடக் கூடியது அல்ல.
சமூக வலைத்தளங்களில் ஓரளவுக்கு இதுகுறித்து கவனம் கொண்டு எழுதுவதும், விமர்சிப்பதும், கேள்விகள் எழுப்புவதும் நம்பிக்கையளிக்கின்றன.

ஏற்கனவே பெரியாரையும் பெரியாரின் கொள்கைகளையும் தங்கள் சுயநலன்களுக்காகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் திமுகவும் அதிமுகவும் புறம் தள்ளியதால்தான் ஆர்.எஸ்.எஸ்ஸும், பிஜேபியும் தமிழகத்தில் காலூன்ற முடிந்தது.
இப்போது பன்னீர்செல்வம் கட்சியில் தன்னை நிலைநிறுத்திகொள்வதற்காகவும், தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவும் அதே தீய சக்திகள் வேருன்ற இடமளிக்கிறார்.
நேர்மை, வெளிப்படைத்தன்மை, இலட்சியங்களற்ற சுயநல அரசியல்தான் தமிழ்நாட்டிற்குள் இதுபோன்ற மனிதகுல விரோதிகள் நுழைவதற்கு வழி வகுக்கிறது என்பதையும் சேர்த்து அறிய வேண்டியிருக்கிறது.
துரோகங்களால் பிறந்த ஆர்.எஸ்.எஸ் துரோகங்கள் மூலமே தன்னை வளர்த்திட வெறி கொண்டு நிற்கிறது.முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக