ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு தந்த அங்கீகாரம் ! வடநாட்டு ஊடகங்களில் முதல் முறையாக தமிழ்நாடு பற்றி ஆக்கபூர்வமான


sonia singh Verified account ‏@soniandtv Most remarkable thing about the #jallikattu protests is the young women staying at the beach with no fear of harassment.Delhi should learn
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டி, வெற்றியை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டு போராட்டம் உலக மக்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதனால், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தப் போராட்டம். சமூக வலைதளமான டுவிட்டரில் என்.டி.டிவியின் டைரக்டர் சோனியா சிங் போட்டுள்ள பதிவு, இந்தியாவுக்கே தமிழ்நாட்டை முன்னிறுத்தியுள்ளது.
அதாவது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெறுகின்றது. மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. ஆனால், எந்த ஒரு பெண் மீதும் இளைஞர்கள் கைகள் அத்துமீறவில்லை. மாறாக பாதுகாப்புகள் தான் செய்துள்ளனர்.
“சென்னை மெரினா கடற்கரை போராட்டக்காரர்களை பார்த்து, டெல்லி பாடம் கற்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக