ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜனவரி 26-ஐ தமிழர்கள் கருப்பு தினமாக ,,,? பதட்டத்தில் மத்தியரசு!

உண்மையில் இந்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் பதட்டத்தில் முக்கியமானது குடியரசு தினமான ஜனவரி 26-ஐ தமிழர்கள் கருப்பு தினமாக கடைப்பிடிப்பதற்கு முன் இந்த கூட்டத்தை கலைத்துவிட வேண்டும் என்பதே.
அதற்காகவே மாநில அரசு மூலம் அவசர சட்டம் கொண்டுவந்து தமிழர்களுக்கு குச்சு மிட்டாய் கொடுக்கும் வேலையை செய்கிறார்கள்.
உண்மையில் மத்தியரசு இந்த பிரச்னையை முழுமையாக தீர்க்க வேண்டுமானால் காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிப்பது மட்டும்தான் ஒரே வழி.

அதை செய்யாமல் தற்காலிகமாக ஒரு நாள் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டு மறுபடியும் நீதியின் பெயரால் தமிழர்களை காயடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது மோடியின் கேடி அரசு.
தமிழர் கூட்டம் அதை தகர்க்கும்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா
 அருண் கருணாநிதி :ஏமாற்றாதே ஏமாறாதே ----விலங்கினம் பட்டியலில் இருந்து காளை மாடுகளை நீக்கி மத்திய அரசு அவரச சட்டம் கொண்டு வந்து அது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற்றால் தான் ஜல்லிக்கட்டு க்கு நிரந்தர தீர்வாக அமையும் , அதைவிடுத்து மாநில அரசு அவசர சட்டம் எல்லாம் தற்காலிக தீர்வாக தான் இருக்கும் , உச்சநீதிமன்றம் எந்நேரமும் தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது, இது ஏமாற்று வேலை, மத்திய அரசின் கையில் தான் இதற்கு நிரந்தர தீர்வு காண வழி இருக்கிறது அதாவது அவசர சட்டம் நிரந்தரத்தீர்வல்ல மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக மக்களவை ஏற்றுக்கொண்டு பின்பு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தும் திருத்தம் செய்யப்பட்டு மத்திய கெஸட்டில் பிரசுரம் செய்யப்படவேண்டும்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக