செவ்வாய், 3 ஜனவரி, 2017

இரவில் ஓ.பி.எஸ் கடைசியாக, கோட்டையில் நடத்திய கேபினெட் கூட்டம்!

"> ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்தடுத்து, ஆளும் கட்சியான அதிமுகவின் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே தெளிவாக தெரிவித்து வருகிறோம்.
அந்த வகையில் நேற்று ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஓ.பன்னீரை கோட்டையில் சந்தித்ததையடுத்து, மாலையில் அவசரமாக முதல்வரும் சில அமைச்சர்களும் போயஸ் இல்லம் சென்றதையும் அங்கு வைத்து பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தன் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்ததையும் நேற்று (02-01-2017) மாலை 7 மணிச் செய்திகளில் வெளியிட்டிருந்தோம். போயஸ் கார்டனில் நடந்த இச்சந்திப்பின் பின்னர் நேரடியாகக் கோட்டைக்குச் சென்ற பன்னீர்செல்வம் நேற்று மாலை ஏழேகால் மணியில் இருந்து இரவு எட்டேமுக்கால் மணிவரை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் முதல்வராக இருந்த நிமிடம் வரை எடுத்த முடிவுகளை அமைச்சரவையின் அனுமதியோடு நிறைவேற்றினார்.
உதாரணத்திற்கு உள்ளாட்சித்தேர்தல் தள்ளிப் போகும் காரணத்தால் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கும் முடிவுக்கு அமைச்சரவை கேபினட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக ஓ.பி.எஸ் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. நேற்று இரவு நடந்த கூட்டம்தான் முதல்வராக ஓ.பி.எஸ் நடத்திய கடைசிக் கூட்டம். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக