திங்கள், 2 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் ராஜினாமா ! முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை சசியிடம் கொடுத்தார்


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்கும் வகையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் வழங்கினார்.அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்ததையடுத்து 3-வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்பேற்றார். அதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் அவரை நேரில் சந்தித்து தீர்மானம் நிறைவேற்றி ஆதரவு தெரிவித்தனர்.
அதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தீர்மானம் நிறைவேற்றி அவரிடம் நேரில் சென்று ஓ. பன்னீர் செல்வம் கொடுத்தார். அதன் பின்னர் சசிகலா அதிமுக தலைமை கழகத்திற்கு சென்று அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை இன்று காலை அறிக்கை விடுத்தார். அதை நமது மின்னம்பலம் இணைய செய்தியில் மதியம் 1 மணிக்கு பதிவு செய்திருந்தோம்.
இன்று திடீரென மாலை சசிகலா அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் நேரில் சென்றனர். அப்போது, போயஸ் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜெயலலிதா திருஉருவப் படத்தை சசிகலா திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்கும் வகையில் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கினார்.
இதற்கிடையில், இன்று, மதியம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பன்னீர் செல்வத்தை திடீரென நேரில் சந்தித்து பேசுகையில், அரசு நலத்திட்டங்களை குறித்து பேசியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், அவர், பன்னீர் செல்வத்திடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதீர்கள் என்று பேசியதாக சசிகலாவிற்கு தகவல் சென்றதையடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக தெரியவருகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக