திங்கள், 30 ஜனவரி, 2017

பசுக்களுக்கு திருமண மண்டபத்தில் வளைகாப்பு.. ஏழு தலைமுறைகளை கண்ட ஆறு பசுக்கள்


சேலம் மேட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான 7 தலை முறைகள் கொண்ட பசுக்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தறித்தன. அந்த பசுக்களை திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்து ஒன்றாக நிற்க வைத்து பெண்கள் வளைகாப்பு விழாவை நடத்தினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து அவற்றை வழிபட்டனர். சேலம் சுகனேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள வாசவி சுபிக்ஷா ஹாலில் நடந்த வளைகாப்பு விழாவில், தலை முறைகளை உருவாக்கிய முதல் பசு வரவழைக்கப்பட்டது. அதற்கு அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு வைப்பது போல், சந்தனம், குங்குமம், மஞ்சள், புதுப்புடவை, அலங்காரபொருட்கள் போன்றவை பசு முன்பு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீதமுள்ள 6 பசுக்களுக்கும் அதே போல் பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்களும், குழந்தைகளும், பொதுமக்களும் பசு வழி பாட்டை மேற்கொண்டனர்.
இந்த 7 பசுக்களில், 2ம் நிலையான பசுவிற்கு பால் சுரக்கும் காம்பு 2 மட் டுமே உள்ளது. கோடி மாடுகளில் ஒன்றிரண்டுக்கு மட்டுமே இவ்வாறு இருக்கும்.
விழாவில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது; பசுவை வணங்கினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இவ்வாறு 7 தலை முறைகள் கொண்ட பசுக் கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்திருப்பது அதிசயமான ஒன்றாகவே பார்க் கிறோம்.
அவற்றை ஒரு சேர நிறுத்தி வளைகாப்பு விழாவை நடத்தியது மகிழ்ச்சி யாக உள்ளது. இது போன்ற விழாக்கள் முன்பெல்லாம் நடத்தப்பட்டு வந் தது.
தற்போது தான் அதன் தாக்கம் குறைந்து விட்டது. இன்று திருமணமண்ட பத்தில் பசுக்களுக்கு வளைகாப்பு நடத்தியதுடன், அனைத்து வகையான பொருட்களும் பசு முன்பாக வைத்து வணங்கினோம்.
7 வகையான உணவுகளை அதற்கு படைத்தோம். விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறி னர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக