திங்கள், 2 ஜனவரி, 2017

ஓ.பன்னீரை அமுக்கி ... மோடிக்கு டீல் போட்ட சின்னம்மா மாபியாவின் காசு பணம் துட்டு மணி மணி ?

தலைவரே, எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, எம்.ஜி.ஆரால் உருவாக்கப் பட்டு, ஜெயலலிதா கைக்கு வந்த அ.தி.மு.க. இப்போது, சசிகலாகிட்டே வெளிப்படையா ஒப்படைக்கப்பட்டிருக்குது. பொதுச்செயலாளரான சசிகலா விரைவில் முதல்வராவார்னும் எதிர்பார்ப்பு இருக்குதே? அ.தி.மு.க.வில் என்ன நடக்குதுங்கிறதை இன்ச் பை இன்ச்சா
நக்கீரன்ல தொடர்ந்து படிச்சிக்கிட்டுத்தானே வர்றோம். தொண்டர்களிடம் உள்ள எதிர்ப்பலையை சமாளிக்கும் விதத்தில், பொதுக்குழுவில் சசிகலாவே உருக்கமா பேசி, தனக்கு ஆதரவு கேட்பதுன்னு ஒரு வியூகம் முதலில் வகுக்கப்பட்டதையும், அப்புறம், சசிகலா, பொதுக்குழுவுக்கு வராமலேயே, அவரை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தீர்மானத்தை அவரிடம் கொண்டுபோய்க் கொடுக்கிற பதுங்கிப் பாயும்’வியூகம் வகுக்கப் பட்டதையும் நக்கீரன், முன்னதாகவே சொல்லுச்சு. அதுதானே இப்ப நடந்திருக்கு.''""ஆமாங்க தலைவரே, பொதுக்குழு நடக்கும் போதே, சசிகலாவை பொதுச்செயலாளரா நியமிச்சதற்கான தீர்மான நகலை எடுத்துக்கிட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலான டீம், கார்டனுக்குப் போய், சசிகலாகிட்ட கொடுத்தப்ப, எதுவும் பேசாமல் அதை வாங்கிக்கிட்ட சசிகலா, அங்கிருந்த ஜெயலலிதா படத்துக்கிட்ட அதை வச்சி கண்ணீர் விட்டதை டி.வி.யிலே பார்த்திருப்பீங்க. உடனே  ஓ.பி.எஸ்., இதை அங்கே இருந்த டி.டி.வி.தினகரன் கிட்ட சொல்ல,  அவர் தன்னோட கர்சிப்பை எடுத்து, சசிகலாவிடம் கொடுத்திருக்கார். சசிகலா கண்ணைத் துடைச்சிக்கிட்டாராம்.''’"காட்சியமைப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.
தீர்மான நகலைக் கொடுக்கப் போனவர்கள் பத்தியும் அ.தி.மு.க.வில் சலசலப்பு தெரியுதே?'"கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தை, கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் போன்ற சீனியர்கள்தான் கொண்டுபோய்க் கொடுத்திருக்கணு மாம். ஆனா முக்குலத்தோர் சார்பா ஓ.பி.எஸ்., கவுண் டர்கள் சார்பா தம்பிதுரை, எடப்பாடி, தலித்துகள் சார்பா அமைச்சர் ராஜலட்சுமி, செட்டியார் சமூ கத்தின் சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், வன்னியர் சமூகத்தின் சார்பில் கே.பி.முனுசாமி, இஸ்லாமியத் தரப்பின் சார்பில் அன்வர்ராஜான்னு, சமுதாய ரீதியாவே ஆட்கள் இதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதா சொல்றாங்க. இதில் சீனியர் பதவியில் இருப்பவங் களுக்கும், லிஸ்ட்டில் இடம்பெறாத சமுதாயத் தினருக்கும் அதிருப்தி இருக்குது. ஆனா, சசிகலா ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப கவனமா காய் நகர்த்துறார்னு அவர் தரப்பில் சொல்றாங்க.''’"4-ந் தேதி பேசும்போதுதான் தாய்க்கழக நிலைப்பாடு தொடர்பான தீர்வு ஏற்படும்னு சொல்றாங்க.''’""

அ.தி.மு.க சைடில் பா.ஜ.க.வுடனான ரகசிய சந்திப்புகள் மூலம் அதிகாரச் சிக்கல்கள் தீர்க்கப் படுதாமே?

"மத்திய அரசு, சசிகலாவின் ஆதிக்கத்துக்கு செக் வைக்க, ஒ.பி.எஸ்.சைத் தாங்கிப் பிடிச்சது நாடறிஞ்ச ரகசியம். இது சசிகலா தரப்பை சங்கடப்படுத்துச்சு. அதனால் சசிகலா சார்பில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் பேசிய அ.தி.மு.க. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, "எங்க கட்சி, சசிகலாவின் தலைமையை ஏத்துக்கிட்டு செயல்படுற நிலையில், அவருக்கு மத்திய அரசு தொடர்ந்து சங்கடம் கொடுத்துக்கிட்டு இருக்கு. ஒ.பி.எஸ்.சை நீங்க தாங்கிப்பிடிக்கிறீங்க.. சசிகலா புஷ்பாவை தூண்டிவிட்டு, அவரோட கணவரை எங்க கட்சி ஆபீசுக்கு வரவைச்சி, ரகளையை உண்டாக்கிட்டீங்க. உங்களால அவர்தான் பாதிக்கப்பட்டாரு. இனியும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமைதியா இருக்கமாட்டாங்க. அவங்க ஒ.பி.எஸ்.சுக்குக் கொடுத்துவரும் ஆதரவை திரும்பப் பெற்றால் என்ன ஆகும்னு யோசிங்க'ன்னு அதிரடியாகச் சொல்லியிருக்கார்.'

"இதற்கு எதற்கு வெங்கையா நாயுடு வரைக்கும் போகணும். ஒ.பி.எஸ்.கிட்டே சின்னம்மா சொன்னாங்கன்னு சொன்னாலே அடங்கிடுவாரே?'

பா.ஜ.க.வுக்குத் தெரியணும்ங்கிறதாலதான் தம்பிதுரை மூவ்வாம். ஒ.பி.எஸ்.ஸை டி.டி.வி. தினகரனே ஆஃப் பண்ணிட்டாராம்.
 பொதுக்குழுவுக்கு முதல் நாளான 28-ந் தேதி, கார்டனுக்கு அழைக்கப்பட்டார்

ஒ.பி.எஸ்.கிட்டே கடுமையான குரல்ல பேசிய தினகரன், "மோடியின் தைரியத் தில் சின்னம்மாவைப் புறக்கணிக்கிறீங்களா? உங்களை முதல்வர் பொறுப்பை ஏற்கச் சொன்னப்ப, "எப்ப திருப்பிக் கேட்டாலும் பதவியைக் கொடுத்திடுவேன்'னு சொல்லித் தானே பதவியேற்றீங்க. இப்ப என்ன ஆச்சு? மோடி உங்களை எத்தனை காலத்துக்கு காப்பாத்துவாரு'ன்னு தினகரன் கேட்க, ஒ.பி.எஸ். பவ்வியமா சரண்டராயிட்டாராம்.'

"டெல்லி போய்விட்டு வந்ததிலிருந்து கார்டன் பக்கம் போகாமல் இருந்த ஒ.பி.எஸ், 26-ந் தேதியன்னைக்குப் போனாரு. அதுக்குக் காரணம் கார்டனில் இருந்த ஃபைல் களை எடுப்பதற்காகத்தான்னு நாம பேசிக்கிட்டோமே.''"ஆமாங்க தலைவரே.. . அவசரமா கிளியர் செய்யவேண்டிய, உள்துறை உள்ளிட்ட சில துறைகளின் ஃபைல்களை எடுக்கத்தான் ஓ.பி.எஸ். அங்கே போனார்ன்னு நாம பேசிக்கிட்டோம். அப்படி எடுத்துவரப்பட்ட ஃபைல்களின் அடிப்படையில்தான் இப்ப ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி. பதவி தரப்பட்டிருக்குது. ஐ.பி.எஸ்.ஸைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். புரமோஷன் லிஸ்ட்டும் எதிர் பார்ப்பு எகிறிடிச்சி.'

'"நானும் ஐ.பி. எஸ். ஏரியா தக வல்களோடுதான் லைனில் இருக்கேன். காவல்துறை தொடர்பான ஒரு தகவலைச் சொல்றேன். பான்பராக் விவகாரத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் மாமூல் வாங்கியதற்கான ஆதார டைரி ஒன்று, ரெய்டில் சிக்கியது பற்றி முதன்முதலில் நக்கீரன்தான் சொன்னது. டைரியில் அடிபடுவது தாங்கள் இல்லை என்று, சில காவல்துறை அதிகாரிகள், மேலிடங்களுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பது பற்றியும் கூட போனமுறை பேசிக்கிட்டோம். இப்படி கடிதம் எழுதிய சிட்டி கமிஷனரான ஜார்ஜ் பெயர் உட்பட 12 உயரதிகாரி களின் பெயர், அந்த டைரியில் இருக்குதாம். இருந்தும், இந்த விவகாரம் பற்றி நடவடிக்கை எடுக்கணும்னு கமிஷனர் ஜார்ஜ் கடிதம் எழுதியிருக் காரு. எல்லாம் டி.ஜி.பி. பதவியை நோக்கி நகர்த்தப்படும் அதிரடி வியூகமாம். அவருக்கு சப் போர்ட்டா ஷீலா பாலகிருஷ்ணன் இருக் காராம்.

இதையெல் லாம் தாண்டி பான் பராக் விவகாரம் பூதா காரத்தைக் கிளப்பும்னு காவல்துறை வட்டா ரத்திலேயே பதட்டம் தெரியுது.'' ">படங்கள் : ஸ்டாலின், அசோக்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக