ஞாயிறு, 1 ஜனவரி, 2017

அதிமுக கிளை கழகங்கள் பலவும் கலைக்கப்படுகிறது ..கலவரம் ... புரட்சி மலர் ஜெ. தீபா பேரவை



அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று, கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதிகளில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நேற்று பொறுப்பேற்றார். 'தனக்கு சாதகமான பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலராகி உள்ளார். முன்னணி தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, பதவி சுகத்தில் உள்ளவர்கள் சசிகலாவை ஆதரித்துள்ளனர்' என, கட்சியில் பெரும்பாலானோர் கொதித்து போய் உள்ளனர். தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகர் மாவட்ட மீனவரணி செயலரும், தமிழ்நாடு அரசு வக்பு வாரிய உறுப்பினருமான பாரூக், ஈரோடு மாநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கவுரி சங்கர், மாநகர் எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர், ஈரோடு மாநகர் அம்மா பேரவை இணை செயலர் ஆகியோர், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

பதவியை ராஜினாமா செய்த, அவர்கள் கூறியதாவது: தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் மூலம் பொதுச்செயலர் பதவியை, சசிகலா அபகரித்துள்ளார்.

ஜெ., அண்ணன் மகள் தீபா, கட்சிக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவரால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். ஆட்சி, பதவி சுகத்துக்கா கவே முன்னணி மற்றும் மூத்த தலைவர்கள் சசிகலாவை ஆதரிக்கின்றனர். தொண்டர்கள், பொதுமக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு சமாதி கட்டி, இரண்டு நாட்களாகி விட்டது. வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள், பதவி மற்றும் கட்சி யில் இருந்து விலகுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா நியமனத்தால் அதிருப்தியடைந்த, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட, அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் ஒன்றிணைந்து, 'புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை' என்ற பெயரில், திருச்சியில் புதிய அமைப்பை துவக்கியுள்ளனர். இதற்கான துவக்க விழா, ஸ்ரீரங்கத் தில் நேற்று நடந்தது.திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ரங்கராஜ் கூறியதாவது: புதிய தலைமை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் தீபா, கட்சித் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என, விரும்புபவர்கள் ஒருங்கிணைந்து, புதிய பேரவையை துவக்கி உள்ளோம்.

 10 மாவட்டங்களை சேர்ந்த, அ.தி.மு.க., கிளை செயலர்கள் இங்கு வந்துள்ளனர். இப்போதைக்கு ஒருங்கிணைப்பாளர்களை  மட்டும் நியமித்து, உறுப்பினர்கள் சேர்க் கையை துவக்கி உள்ளோம். இதுவரை, 1,000 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர் களை சேர்த்த பின், தீபாவை நேரில் சந்தித்து, பேரவைக்கான அங்கீகாரத்தை பெற திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். கடலுாரில்,சசிகலா பதவி ஏற்றதை கண்டித்தும், பதவி விலகக் கோரியும், நேற்று, பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், அ.தி.மு.க., மகளிரணி, வழக்கறிஞரணியை சேர்ந்தவர்கள் பங்கேற் றனர்.அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி கிராமத்தில், சசிகலாவின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வேலுார், காட்பாடி அக்ரஹாரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், தீபாவை வாழ்த்தி, அ.தி.மு.க.,வினர் சிலர், நேற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர். காட்பாடி, அ.தி.மு.க., பகுதி செயலரின் ஆதரவாளர்கள், அங்கு வந்து பேனரை அகற்ற முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பின், இரு தரப்பினரும், தனித்தனியாக போலீசில் புகார் செய்தனர்.

ஜெ. நினைவிடத்தில் தற்கொலை முயற்சி ஜெயலலிதா மீதுள்ள பற்றால், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அவர்க ளில் பெரும்பாலானோர், சசி கலாவை வசைபாடி செல்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நேற்று முறைப்படி பதவி யேற்ற நிலையில், ஜெயலலிதா நினைவிடத் தில், காலை, 11:30 மணிக்கு தொண்டர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை க்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தற்கொலைக்கு முயன்றவர், திருவள்ளுவர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த, சிவாஜி ஆனந்த், 50. ஜெ., நினைவிடத் தில், திடீரென விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். 'ஜெயலலிதா இருந்த பொறுப்புக்கு, சசிகலா வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவர் பொதுச்செயலராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலைக்கு முயன் றேன்' என, சிவாஜி ஆனந்த் கூறினர். இது குறித்து, அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர். - நமது நிருபர்கள் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக