திங்கள், 2 ஜனவரி, 2017

பிரேசில் சிறையில் கலவரம்: 60 பேர் மரணம் .. போதை வஸ்து கடத்தல் .. ஒருவருக்கு ஒருவர் சுட்டு ..

மனோவ்ஸ்: பிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகார மோதல் பிரேசில் நாட்டில் அமேசான் காட்டு பகுதியை ஒட்டிய மனோவ்ஸ் சிறை உள்ளது. அங்கு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றசம்பங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று இரவு ஏற்பட்ட அதிகார மோதல் பெரும் கலவரமாக மாறியது. அந்த கலவரம் இன்று காலை 7 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் சிறைபிடிப்பு சிறை அதிகாரிகள் 12 பேரை பிணையமாக பிடித்த கைதிகள் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர்.
60 கைதிகள் பலி இந்த கொடூர கலவரத்தில் 60 க்கும் மேற்பட்டார் உயிரிழந்ததாக அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளன. கைதிகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது., கலவர சம்பவத்தை பயன்படுத்தி பல கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என கூறப்படுகிறது.தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக