திங்கள், 2 ஜனவரி, 2017

தம்பிதுரை பன்னீரை கவிழ்த்து அடிமை நம்பர் 1 ஸ்தானத்தை கைப்பற்றுகிறார். விவசாயிங்க சாகிறாங்க .. இவங்க கொள்ளையிலேயே கண்ணா இருக்காங்க

சென்னை: சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதன் மூலம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. பன்னீர்செல்வத்துடனான பனிப்போரின் உச்சமாகவே இக்கோரிக்கையை தம்பிதுரை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவின்
போது முதல்வர் பதவிக்கு தம்பிதுரை பெயரும் அடிபட்டது. ஆனால் மத்திய அரசு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தியது. இதனால் பன்னீர்செல்வம் முதல்வரானார். பன்னீர்செல்வம் முதல்வரானாலும் அவரை பின் தொடர்ந்தவராக தம்பிதுரை வலம் வந்தார். டெல்லிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் சென்றபோது கூடவே இருந்தார் தம்பிதுரை. பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் தம்பிதுரை உடனிருந்தார். இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு மோடியும் பன்னீர்செல்வமும் தனியே 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சசிகலா தரப்பு தமக்கு தரும் நெருக்கடிகளை மோடியிடம் பன்னீர்செல்வம் விவரித்திருக்கிறார். அதே நேரத்தில் டெல்லியில் கோலோச்சும் தம்மை அதுவும் லோக்சபா துணை சபாநாயகராக இருக்கும் தம்மை வெளியே அனுப்பியதை தம்பிதுரையால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் தம்பிதுரை. தற்போது அமைச்சர்கள் சிலரே பன்னீர்செல்வத்துக்கு எதிராக சசிகலாவே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு தம்மை அவமதித்த பன்னீர்செல்வத்தை பழிவாங்கும் வகையில் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டு கலகக் குரலை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை. கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடம் இருக்கக் கூடாது என தம்பிதுரை கூறியுள்ளார். அதாவது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தி தமது கோபத்தை தணித்திருக்கிறார் தம்பிதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக