செவ்வாய், 24 ஜனவரி, 2017

51 போராளிகள் மெரீனாவில் பரபரப்பு கோரிக்கைகள் .. இறுதி நிமிடங்கள்


Marina Beach Protest for Jallikattu Endsஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நிமிட பரபர நொடிகள் கீழே!< மெரினாவில் தற்போது 51 பேர் போராட்டத்தில் உள்ளனர். இவர்கள் காவல்துறைக்கு மூன்று கோரிக்கைகள் வைத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள். அவை முறையே.. - தமிழர்களாக வந்தோம், தமிழர்களுக்காக போராடினோம். இப்போது தமிழர்களாக செல்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என எழுதித்தர வேண்டும். - வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாதவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
 ஜல்லிகட்டு சட்டம் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்படும் என உறுதி வேண்டும்
மேலே கூறப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளையும் காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
இவற்றை செய்தியாக வெளியிட்டால் மெரினாவில் இருந்து 51 பேரும் கலைந்து செல்லத்தயார் என அறிவித்தனர்.விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக