புதன், 25 ஜனவரி, 2017

மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - தை 25 ..கோவையில் ஸ்டாலின்!

கோவையில் ஜனவரி 25 ஆம் தேதி இரவு நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.
1965 ம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி மத்திய அரசின் கட்டாய இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. இளைஞர்கள் பலர் உடலில் தீ வைத்துத் தங்களை மாய்த்துக் கொண்டனர். 55 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்களின் தீவிரப் போராட்டத்தால் இந்தி மொழித் திணிப்பை மத்திய அரசு கைவிட்டது. எழுச்சி மிகுந்த அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப் படுகிறது. இந்த நாளில் பொதுக்கூட்டங்களை தி.மு.க வும் அ.தி.மு.க வும் நடத்துகின்றன. ஜனவரி 25 ம் தேதி கோவையில் நடக்கும் 52-வது ஆண்டுக் கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக