திங்கள், 16 ஜனவரி, 2017

தயார் நிலையில் 253 காளைகள்: சில காளைகள் அவிழ்த்துவிட்டதால் அலங்காநல்லூரில் பதற்றம்:

போலீஸ் குவிப்பு பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்குமிடங்களிலும் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காளைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்னனர். ஊரகப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அலங்காநல்லூரில் மட்டும் 253 காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகள் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தடையையையும் மீறி இன்று காலை வாடிவாசல் வழியே அலங்காநல்லூரில் அவிழ்த்துவிடப்பட்டது. போலீசாருக்கு எதிராக பொதுமக்கள் திரண்டிருப்பதால் பெரும் பதட்டம் நிலவுகிறது. முகில் நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக