வெள்ளி, 6 ஜனவரி, 2017

தினகரன் அன்னிய செலாவணி மோசடி ரூ25 கோடி அபராதம்... அப்பீல் மீது இன்று தீர்ப்பு!!


dinakaranசென்னை: அன்னிய செலாவணி மோசடியில் (ஃபெரா வழக்கு) ஈடுபட்டதற்காக அமலாக்கத்துறை ரூ25 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ரூ25 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன். இவர்தான் தற்போது அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகிப்பவர்.

சசிகலாவை முதல்வராக்குவதற்கும் தினகரன் தீவிர முனைப்பில் இருந்து வருகிறார். அத்துடன் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பிலும் படுபிசியாக இருந்து வருகிறார்.>அன்னிய செலாவணி மோசடி வழக்குகள்

தினகரனின் வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்தன.
தினகரன் அப்பீல்
இது தொடர்பான விசாரணையின் முடிவில் தினகரனுக்கு ரூ25 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார்.
ரூ25 கோடி விதித்தது சரியே
ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.25 கோடி அபராதத் தொகை விதித்தது சரியே என அதிரடி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.>இன்று தீர்ப்பு
இதை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் தினகரனின் அப்பீல் மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு அளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக