வெள்ளி, 27 ஜனவரி, 2017

கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சார சப்ளை ஆரம்பம்!

பெங்களூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 221 மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கு வரத் தொடங்கியுள்ளது என்று இம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார். இதுபற்றி இன்று அவர் கூறுகையில், மத்திய உற்பத்தி ஸ்டேஷனுடன் கர்நாடகா மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டும்போது, கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சாரம் தரப்பட வேண்டும். கடந்த சனிக்கிழமை கூடங்குளம் 2வது யூனிட் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது. எனவே கர்நாடகாவுக்கு உரிய மின்சார சப்ளை ஆரம்பமாகிவிட்டது. 221 MW electricity to Karnataka from Kudankulam, says power minister  இதன் மூலம், கர்நாடகாவில் கோடைக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என்றார் அவர்.
 
2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற குறைந்த கட்டணத்தில் கர்நாடகா 442 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும். ககர்நாடகாவை தவிர தெலுங்கானாவுக்கு கூடங்குளத்தில் இருந்து 50 மெகாவாட், கேரளாவுக்கு 133 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்போகிறது. தமிழகத்திற்கு 462.50 மெகாவாட் அளவுக்கு கூடங்குளம் 2வது யூனிட்டிலிருந்து மின்சாரம் ஒதுக்கப்படும். கூடங்குளம் அணு கழிவை, கர்நாடக மாநிலம் கோலாரில் கொட்ட உள்ளதாக தகவல் வெளியானபோது அதை கடுமையாக எதிர்த்தது கர்நாடகா. கர்நாடக அரசியல் கட்சியினர் எதிர்ப்பால் மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில் கர்நாடகாவுக்கு மின்சாரம் மட்டும், கூடங்குளத்திலிருந்து சப்ளையாவது குறிப்பிடத்தக்கது.
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக