செவ்வாய், 24 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு.. 2016-ம் ஆண்டு அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தனது 2016-ம் ஆண்டு அறிவிப்பாணைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதனை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான நீதிமன்ற அமர்வு ஜல்லிக்கட்டு மனு மீதான முடிவை எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் தெரிவித்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்டதாகும்.
பின்னர், 2014ஆம் ஆண்டு விலங்குகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் மீண்டும் தடைவிதித்தது. இதனையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிப்பாணை பிறப்பித்தது மத்திய அரசு. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய நிரந்தர சட்டத்திற்கான சட்ட முன்வடிவினால் இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக