வெள்ளி, 23 டிசம்பர், 2016

RMR ஜெயலலிதா + சசிகலாவின் கஜானாவாக செயல்பட்டாரா ? ops ஒப்புதலோடுதான் ரெயிட்? ஆர். எம்.ஆரின் 500 கோடி சொத்து!!… .மீதம் எங்கே?.

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் மோகன்ராவ் வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். சென்னை, சித்தூர், கர்நாடக உள்ள ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடு என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், 50 கிலோ தங்கம் மற்றும் ரூ.48 லட்சம் புதி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், உண்மையாக ராம் மோகன் ராவின் மொத்த சொத்து மதிப்பு 500கோடி என கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கியது 150கோடி மட்டுமே. பிறகு மிதமுள்ளசொத்துக்கள் என்ன வாயிற்று? அவை எங்கே போனது? அவை பதுக்கப்பட்டதா என பல கேள்விகள் எழுகின்றன. காரணம், ரெய்டு நடக்கப்போவது குறித்து இரு தினங்களுக்கு முன்பே ராம் மோகன் ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், என்ன நடந்தது என்பது மட்டும் மறைக்கப்பட்டுவிட்டது
உறுதி தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.75,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்க பத்திரங்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் சித்தூர், முல்பாகள், கடப்பா மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நில ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லைவ்டே ,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக