வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஜெயா வழங்கிய மோடியின் "பன்னீர்" ரிலீஸ் .. ஷீலா பாலக்கிருஷ்ணன் வகையறா கலக்கத்தில் .

அம்மா இருந்தவரை சாதுவாகவே இருந்த முதல்வர் டெல்லி போய் பிரதமரைப் பார்த்து வந்த பின்னர் புயலாக மாறி விட்டார். தமிழகம் வந்த மறுநாளே ராம்மோகன் ராவ் வீட்டில் அதிரடி ரெய்டும் பதவி நீக்கமும் செய்யப்பட்டார். மேலும் ரெட்டி வீடுகளிலும் தொடர்ந்து அதிரடிகள் தொடர்கிறது. ஒரு விஷயத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். நல்ல ஆட்சிக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, இருக்கிறார்களோ, அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அவர்களை தடையறத் தாக்குவது, தடைகளை உடைப்பது. ஜெ., உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது மேல் நிலை அதிகாரிகளில்சில கருப்பு ஆடுகள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். சில பண முதலைகளுக்கு உடந்தையாக பல பைல்கள் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இடைக்கால முதல்வர் பன்னீரை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. மேலும், எதாக இருந்தாலும் நேராக மருத்துவமனைக்கு சென்று சசிகலாவிடம் தான் அனுமதி பெறுவது அரசு முடிவுகளை எடுப்பது என நிழல் முதல்வராகவே சசியை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தான் முதல்வரை அதிகம் உறுத்தியுள்ளது என்கிறார்கள். இப்போது முதல்வருக்கு எந்த தடையும் இல்லை. பிரதமரின் ஆசியும் ஆதரவும் இருக்கிறது. யாருக்கும் குனிந்து நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, தடைகளை உடைப்பதிலும், கொழுத்த முதலைகளையும் ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் அடுத்த குறி பணி நீட்டிப்பு செய்யப்பட்டு ஜெ., வின் செல்லப் பிள்ளையாகவும், அதிகார மையமாகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் தான் என்று கோட்டை வட்டாரத்தில் ரகசியமாக பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் கசிந்து கோட்டை அதிகாரிகள் கதி கலங்கிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது. லைவ்டே,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக