வியாழன், 29 டிசம்பர், 2016

O.பன்னீர்செல்வம் அரசியலை விட்டு ஒதுங்க எண்ணுகிறார்? மன்னார்குடியிடம் மரியாதை கிடைக்காதாம்!

கிட்டத்தட்ட சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகி விட்டது. தடைகள் எல்லாம் விலகி விட்டது. சசிகலா புஷ்பாவை பெரிய சிக்கல் என்று சசிகலா டீம் நினைக்கவே இல்லை என்கிறார்கள். கொசுவை அடிப்பது போல அடித்து விரட்டி விடலாம் என்பதே அவர்கள் நிலை.மீறி பிரச்சனை செய்தால் எப்படி எதிர் கொள்வது என்கிற பிளானும்,ஆள் பலமும் ஆயத்தமாக இருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் பன்னீரிடம் சில விசயங்களைப் பேசி முடித்து விட்டார் எகிறார்கள். சசிகலா தான் முதல்வர் ஆக வேண்டும் நீங்கள் அம்மாவிடம் இருந்தது போலவே மரியாதையுடன் இருக்கலாம் என்று கூற பன்னீருக்கு நன்றாகவே தெரியும் அந்த மரியாதை துளியும் கிடைக்காது என்று.
அசிங்கப் பட்டு..அவமானப் பட்டு ஓரங்கட்டப்படுவதை விட மரியாதையாகவே ஒதுங்கிக் கொள்ளவே எண்ணுவார். தனது நட்பு வட்டத்தில் முதல்வர் மனம் விட்டுப் பேசினார் என்கிறார்கள். அம்மாவோடு போதும். அவர்களை விட என்னை யாரும் உயர்த்திப் பார்க்க முடியாது. ஆகையால் அமைதியாக ஒதுங்கிக் கொள்ளப் போகிறேன். எனக்கும் ஒய்வு வேண்டும் என்று கூறியதாக செய்திகள் கசிகிறது. யோசித்துப் பார்த்தால் முதல்வரின் எண்ணம் சரிதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக